இணையத்தில் நாம் பயன்படுத்தும் எமது கடவுச் சொற்களானது விலைமதிப்பற்ற எமது சொத்துக்களின் ஒரு காவலன் என்றே கூற வேண்டும்.

காஸ்பர்ஸ்கை (Kaspersky) கடவுச்சொல்


பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைதளங்களுக்கு நாம் தரவேற்றும் தகவல்கள் மற்றும் நண்பர்களுடன் ஈடுபடும் அரட்டைகள் (Chatting) என அனைத்தும் எமது தனிப்பட்ட தகவல்களேயே கொண்டிருக்கின்றன.


  • கடவுச்சொல் - Password
  • அரட்டை - Chatting எனவே எமது கடவுச்சொல்லை நாம் ஏனையவர்களிடம் பறிகொடுத்துவிட்டால் அடுத்த கணமே நமது கதி கேள்விக்குறியாகிவிடும். 

எனவே நாம் எமது கடவுச்சொற்களை ஏனையவர்களால் இலகுவில் ஊகிக்க முடியாதவாறு மிகவும் வலிமையானதாக அமைத்துக் கொள்வதன் மூலமே சிறந்த பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:


கடவுச்சொல்லின் பாதுகாப்பை பரிசோதிக்கும் காஸ்பர்ஸ்கை (Kaspersky) இணையதளம்


அந்த வகையில் நாம் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் பாதுகாப்பானதா? அது எந்த அளவு வலிமையாது என்பதை காஸ்பர்ஸ்கை (Kaspersky) நிறுவனம் 
அதன் இணையப்பக்கத்தின் மூலமாக பரிசோதித்து அறிந்து கொள்ள உதவுகின்றது.

காஸ்பர்ஸ்கை இணையதளம் மூலம் நீங்களும் உங்கள் கடவுச்சொல்லை பரிசோதித்துக் கொள்ள விரும்பினால்....

முதலில் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் குறிப்பிட்ட இணையபக்கத்திற்கு சென்று நீங்கள் பயனடுத்தும் கடவுச்சொல்லை உள்ளிடுக.

இனி உங்கள் கடவுச்சொல் எந்த அளவு பாதுகாப்பானது என்பதை உடனடியாக அறிந்துகொள்ள முடியும். மேலும் இதன் மூலம் வெளிப்படுத்தப்படும் முடிவுகள் மூலம் உங்கள் கடவுச்சொல்லை இன்னுமொருவரால் எவ்வளவு நேரத்தில் கடுபிடிக்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

சுவாரஷ்யமான முடிவுகளையும் தருகிறது

இந்த தளத்தின் மூலம் உங்கள் கடவுச்சொல்லை பரிசோதிக்கும் போது உங்கள் கடவுச்சொல்லை இன்னுமொருவரால் கடுபிடிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு ஏற்ப சுவாரஷ்யமான முடிவுகளாகவும் தருகின்றது.


காஸ்பர்ஸ்கை (Kaspersky) கடவுச்சொல் பாதுகாப்பு


அதாவது ஒரு நத்தை 10 அங்குலம் நகர்வதற்குள் உங்கள் கடவுச்சொல்லை இன்னுமொருவரால் கண்டுபிடிக்க முடியும், நீங்கள் 1 மைல் தூரம் நடந்து சென்று திரும்பி வருவதற்குள் உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க முடியும், ஃபெராரி கார் மூலம் 10000 மைல் தூரம் சென்று வருவதற்குள் உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க முடியும், சந்திரனுக்கு சென்று திரும்பி வருவதற்குள்  உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க முடியும் என்பது போன்ற சுவாரஷ்யமான முடிவுகளையும் இந்த இணையதளம் தருகின்றது.


தொடர்புடைய இடுகை:அத்துடன் சாதாரண கணினிகள் மூலம் உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் செலவாகும், உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் செலவாகும் என்பது போன்ற தகவல்களையும் இந்த தளம் தருகின்றது.

நீங்களும் ஒருமுறை பயன்படுத்தித்தான் பாருங்களேன்....!
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top