விண்டோஸ் கணினிகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக அதில் இருக்கும் "சேஃப் மூட்" (Safe Mode) எனும் வசதியை பயன்படுத்துவோம் அல்லவா?

சேஃப் மூட்


அதேபோன்று இன்றைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும் இதனை மேற்கொள்ள முடியும்.


"சேஃப் மூட்" என்றால் என்ன?"சேஃப் மூட்" நிலையில் நாம் எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை துவக்கும் போது அதில் மூன்றாம் நபர் அப்ளிகேஷன்கள் அனைத்தும் செயற்படுவது தடைப்படும். இதன் போது மூன்றாம் நபர் அப்ளிகேஷன்கள் எதுவும் தோன்ற மாட்டாது மாறாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நிறுவப்பட்டு வந்த செயலிகளை மாத்திரமே எம்மால் பயன்படுத்த முடியும்.


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை சேஃப் மூட் நிலையில் துவக்குவது எப்படி?


ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அண்மைய பதிப்புகளில் உங்கள் ஸ்மார்ட் போனின் பவர் பட்டனை அழுத்தும் போது தோன்றும் சாளரத்தில் Power Off என்பதை தொடர்ச்சியாக சுட்ட வேண்டும்  இதன் போது Reboot to safe mode என தோன்றும் சாளரத்தில் OK என்பதை அழுத்தினால் உங்கள் ஸ்மார்ட் போன் சேஃப் மூட் நிலையில் துவக்கப்படும்.


ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முன்னைய பதிப்புக்களில்.
சப்தத்தை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் பயன்படுத்தும் Volume பட்டனை மேலும் கீழும் அழுத்திப் பிடித்தவாறு உங்கள் ஸ்மார்ட் போனை துவக்கினால் உங்கள் ஸ்மார்ட் போன் சேஃப் மூட் நிலையில் துவக்கப்படும்.


சேஃப் மூட் நிலையில் துவக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்வது எப்படி?உங்கள் ஸ்மார்ட் போன் சேஃப் மூட் நிலையில் துவக்கப்பட்டிருந்தால் உங்கள் ஸ்மார்ட் போனின் இடது கீழ் மூலையில் Safe Mode என ஒரு அடையாளம் தோன்றியிருக்கும். மேலும் மூன்றாம் நபர் அப்ளிகேஷன்கள் எதுவும் தோன்ற மாட்டாது .

சேஃப் மூட் நிலையில் ஸ்மார்ட் போனை துவக்குவதால் என்ன பயன்?


நீங்கள் சில அப்ளிகேஷன்களை நிறுவியதன் காரணமாக உங்கள் ஸ்மார்ட் போன் துவங்க மறுத்தால் "சேஃப் மூட்" நிலையில் உங்கள் ஸ்மார்ட் போனை துவக்கி குறிப்பிட்ட அப்ளிகேஷனை மாத்திரம் நீக்கிக் கொள்ள முடியும். 


உங்கள் ஸ்மார்ட் போனை மின்னேற்றுவதற்கு வசதி கிடைக்காத சந்தர்பத்தில் ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய பேட்டரியின் சக்தியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டும் எனின் இந்த "சேஃப் மூட்" நிலையில் உங்கள் ஸ்மார்ட் போனை துவக்கி பயன்படுத்தலாம். இதன் போது உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் சக்தி அதிக நேரத்திற்கு நீடித்திருக்கும்.


தொடர்புடைய இடுகை:
வைரஸ் நிரல்கள் போன்றவற்றின் செயற்பாடு காரணமாகவோ அல்லது வேறு மென்பொருள் சார்ந்த காரணங்களாலோ உங்கள் ஸ்மார்ட் போன் இயங்க மறுக்கும் போது "சேஃப் மூட்" நிலையில் உள்நுழைந்து Factory Reset செய்து கொள்ள முடியும்.


பொதுவாக அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும் இருக்கக்கூடிய இந்த வசதியை அதிகமானவர்கள் அறிந்ததில்லை. இந்த பதிவு பயனுள்ளதாக அமைந்திருந்தால் கீழே தரப்பட்டிருக்கும் தரப்பட்டிருக்கும் எமது பேஸ்புக் பதிவை Like, Share செய்ய மறவாதீர்கள்.
தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top