இணையத்தின் நுழைவாயில் கூகுள் எனும் அளவுக்கு இன்று அனைவராலும் கூகுள் தேடியந்திரமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.



கூகுளுக்கு மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய தேடியந்திரங்கள் இருந்த போதிலும், நாம் தேடக்கூடிய தகவலுக்கு மிகவும் பொருத்தமான முடிவுகளை கூகுள் தேடியந்திரம் தருகின்றமையால் அனைவராலும் இதுவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நாம் தேடக்கூடிய ஒரு தகவலுக்கு மேலும் பொருத்தமான முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கு புதிய வசதி ஒன்றையும் அறிமுகபடுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுளின் ஆழமான தேடல் முடிவுகள் 


இனி நீங்கள் கூகுளில் இசையமைப்பாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் போன்ற பிரபலங்களை தேடும் போது அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களுக்கும் மேலதிகமாக அவர்கள் பாடியுள்ள பாடல்கள், நடித்துள்ள திரைப்படங்கள், அவர்களது ஆல்பங்கள், மற்றும் அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளம் அதேபோல் அவர்களது கூகுள் பிளஸ், பேஸ்புக், பின்ட்ரஸ்ட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றுக்கான இணைப்புகள் என அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு கூகுளில் நீங்கள் Hariharan என தேடினால் உங்களுக்கான முடிவுகள் பின்வருமாறு அமையும்.


கூகுள் தேடல்


அத்துடன் நீங்கள் திரைப்படங்களை தேடும் போது அந்த திரைப்படத்தில் உள்ள பாடல்களும் பட்டியல்படுத்தப்படுகிறது.


இந்த வசதியை கணினியில் மாத்திரம் அல்லாது ஸ்மார்ட் போன்கள் மூலம் கூகுள் தேடலை மேற்கொள்ளும் போதும் பெற்றுக் கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:



Love to hear what you think!

1 comments:

 
Top