ஆரம்பத்தில் இணையமானது தகவல்களை அறிந்துகொள்வதற்காகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று பல்வேறு நோக்கங்களில் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையில் எமது புகைப்படங்கள், ஆவணங்கள், காணொளிகள் மற்றும் ஏனைய கோப்புக்கள் போன்றவற்றை இன்னுமொருவருடன் பகிர்ந்து கொள்வதற்கும், எமது புகைப்படங்களை இணையத்தின் ஊடாக எடிட்டிங் செய்து கொள்வதற்கும், ஆவணங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளவும் என இன்னும் ஏராளமான பயன்களை இன்றைய இணையத்தின் ஊடாக பெற முடிகின்றது.
இருப்பினும் இது போன்ற சேவைகளை நாம் பெறுவதற்காக பெரும்பாலான சந்தர்பங்களில் குறிப்பிட்ட இணையதளத்தில் கணக்குகளை உருவாக்க வேண்டிய தேவைகள் ஏற்படுவதுண்டு. போலியான தகவல்களை தரும் இணையதளம் 

எனினும் குறிப்பிட்ட சேவையை ஒரு தடவை பயன்படுத்திய பின் அதனை மீண்டும் பயன்படுத்த வேண்டிய தேவை உங்களுக்கு இல்லாவிட்டால் எமது உண்மையான தகவல்களை உள்ளிடாமல் போலியான தகவல்களை உள்ளிட்டு கணக்குகளை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது Fakenamegenerator எனும் இணையதளம்.


உண்மைக்கு புறம்பான தகவல்கள்குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்கள் பாலினத்தை (ஆண்/பெண்) தெரிவு செய்து Generate என்பதை சுட்டினால் உங்களுக்கான தகவல்கள் குறிப்பிட்ட தளத்தில் பட்டியலிடப்படும்.

இதில் உங்களின் உண்மையான பெயர், பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், தொழில் மற்றும் தொழில்புரியும் இடம், உயரம், எடை போன்றவற்றுக்கு பாதிலாக போலியான தகவல்கள் தரப்படுகின்றன.

மேலும் இந்த தளத்தில் தரப்படும் நிதியியல் ரீதியான தகவல்கள் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் அமையலாம்.

அதாவது நாம் இணையத்தின் ஊடாக சில  சேவைகளை பயன்படுத்த கணக்குகளை உருவாக்கும் போது அதில் கட்டாயமாக எமது கடனட்டை இலக்கங்கள் மற்றும் அதன் இரகசிய குறியீடுகள் போன்றவற்றை உள்ளிட வேண்டிய தேவை ஏற்படலாம். இவ்வாறான சந்தர்பங்களில் நாம் எமது உண்மையான கடனட்டை இலக்கத்திற்கு பதிலாக இந்த தளத்தில் தரப்படும் கடனட்டை இலக்கங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நாம் Apple ID ஒன்றை உருவாக்கும் போது இவ்வாறன சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு.எனவே தற்காலிகமாக கணக்குகளை உருவாக்கிக் கொள்வதற்கு Fakenamegenerator  எனும் இந்த இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவியாக அமையலாம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top