எமது குரல் கட்டளைகளுக்கு ஏற்ப பல்வேறு செயற்பாடுகளை செய்து கொள்வதற்கான வசதி இன்றைய ஸ்மார்ட் போன்களில் தரப்பட்டுள்ளன.

கோர்டனா ஆண்ட்ராய்டு


அந்தவகையில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் தரப்பட்டுள்ள "கூகுள் நவ்" வசதியும் ஐபோன் சாதனங்களில் தரப்பட்டுள்ள "சிறி" எனும் வசதியும் எமது குரல் கட்டளைக்கு ஏற்ப பல்வேறு செயற்பாடுகளை செய்துகொள்ள உதவுகின்றது.



அதே போன்று கணினிகளுக்கான விண்டோஸ் 10 இயங்குதளம் உட்பட விண்டோஸ் இயங்குதளங்களை கொண்டியங்கும் ஸ்மார்ட் போன்களுக்கு என "கோர்டனா" எனும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

கோர்டனா எனும் இந்த வசதியை விண்டோஸ் இயங்குதளங்களை கொண்ட சாதனங்களுக்கு மாத்திரம் அல்லாது ஆண்ட்ராய்டு, ஐபோன் சாதனங்களுக்கும் வழங்க இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏலவே அறிவித்திருந்தது.

ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கான கோர்டனா செயலி 


இதனடிப்படையில் இதுவரை சோதனை பதிப்பாக இருந்து வந்த "கோர்டனா" செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.


இதன் பயன்பாடுகள் தொடர்பில் அறிய "கோர்டனா" தொடர்பான எமது முன்னைய பதிவை பார்க்க.

இந்த செயலியை ப்ளே ஸ்டோர் மூலமாக உங்கள் நாட்டில் இருந்து தரவிறக்க முடியாவிட்டால் APK புவர் தளத்தின் மூலமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.




Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top