புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அன்று தொடக்கம் இன்று வரை இணையத் தேடலின் அரசன் நான் தான் என்பதை உறுதி செய்து கொண்டே வருகிறது கூகுள்.

கூகுள் தேடலின் புதிய வசதி


இணையத் தேடலில் அடிக்கடி புதுப்புது வசதிகளை புகுத்தும் கூகுள் அண்மையிலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அது தான் Bubble Level என்பதாகும். 

கூகுள் தேடலில் முடுக்கமானி (accelerometer)


இந்த வசதியானது குறிப்பிட்ட ஒரு பொருள் நில மட்டத்தில் இருந்து எத்தனை பாகை சரிவாக அமைந்துள்ளது என்பதை மிகவும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவுகின்றது.


தொடர்புடைய இடுகை:
இந்த வசதியை ஸ்மார்ட் போன்களில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். பொதுவாக இன்று அறிமுகப்படுத்தப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களும் முடுக்கமானி (accelerometer) எனப்படும் திசைப்போக்கைக் கண்டுபிடிப்பதற்கான உணரிகளை கொண்டுள்ளன. இதனை அடிப்படையாக வைத்தே கூகுளின் இந்த புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மொபைல் சாதனங்களின் பாவனை இன்று பெருமளவில் குறைவடைந்து ஸ்மார்ட் போன்களின் பாவனை அதிகரித்துக் காணப்படுவதால் தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமான வசதியாக இதனை குறிப்பிடலாம்.


கூகுள் தேடலில் இந்த வசதியை பெறுவது எப்படி?

இந்த வசதியை பெற்றுக்கொள்ள கூகுளில் Bubble Level என தட்டச்சு செய்து தேடினால் போதும் தேடல் முடிவுகளுக்கான பக்கத்தில் உங்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

பயன்படுத்திதான் பாருங்களேன்...!


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

2 comments:

 
Top