சில சந்தர்பங்களில் எமது ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளை இயங்க முடியாதவாறு தடை செய்வதற்கான தேவைகள் ஏற்படலாம்.

அப்ளிகேஷன் இயங்காமல் தடை செய்தல்


இதுபோன்ற சந்தர்பங்களில் எமக்கு பெரிதும் கை கொடுக்கின்றது அப் பிளாக் (App Block) எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.குறிப்பிட்ட ஒரு செயலியை அல்லது பல செயலிகளை இயங்காமல் தற்காலிகமாக தடை செய்வதற்கு என அருமையான வசதிகளை தருகின்றது இந்த செயலி.

அப் பிளாக் செயலியை பயன்படுத்தி பின்வரும் வசதிகளை பெற முடியும்.

தடை செய்ய வேண்டிய செயலிகளை பல்வேறு குழுக்களாக அமைத்துக்கொள்ள முடியும்.

அப் பிளாக் ஆண்ட்ராய்டு


உதாரணத்திற்கு: அலுவலகத்தில் இருக்கும் போது தடை செய்ய வேண்டிய செயலிகள், வீட்டில் இருக்கும் போது தடை செய்ய வேண்டிய செயலிகள், விடுமுறை நாட்களில் தடை செய்ய வேண்டிய செயலிகள் என பல்வேறு குழுக்களாக அமைத்துக் கொள்ள முடியும்.ஒவ்வொரு நாளுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு சில கிழமை நாட்களிலோ நீங்கள் தெரிவு செய்யும் செயலிகள் இயங்க முடியாதவாறு தடை செய்யலாம்.
அத்துடன் நீங்கள் தெரிவு செய்யும் கிழமை நாட்களில் எந்தெந்த நேரத்தில் குறிப்பிட்ட செயலிகளை தடை செய்ய வேண்டும் என்பதையும் தெரிவு செய்துகொள்ள முடியும்.


மேலும் நீங்கள் தெரிவு செய்யும் செயலிகளை திறக்க முடியாதவாறு தடை செய்ய வேண்டுமா? அல்லது அவற்றில் இருந்து தோன்றும் Notification களை மாத்திரம் தடை செய்ய வேண்டுமா? என்பதை உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம்.

இவைகள் தவிர அப் பிளாக் செயலியை ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு அதன் செட்டிங்ஸ் பகுதியின் ஊடாக கடவுச்சொல் ஒன்றை இட்டுக்கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


தொடர்புடைய இடுகை:

குறிப்பு

இதன் இலவச பதிப்பு மூலம் பல்வேறு செயலிகளை கொண்ட மூன்று குழுக்களையே அமைத்துக் கொள்ள முடியும். மூன்றை விட அதிக குழுக்களை உருவாக்கி நிர்வகிக்க வேண்டும் எனின் இதனை கட்டணம் செலுத்தி பெற வேண்டும். எனினும் ஒரு சாதாரண பயனருக்கு இதன் இலவச பதிப்பு போதுமானது.


Love to hear what you think!

2 comments:

 
Top