பேஸ்புக் தளம் மூலம் அனைவரும் அன்றாடம் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் போன்றவற்றையே பகிந்து கொள்கின்றனர்.



அட்டகாசமான பேஸ்புக்  "ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்"


ஆனாலும் சற்று வித்தியாசமாக அல்லது சுவாரஷ்யமாக தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவுவுகின்றது fsymbols எனும் இணையதளம்.
இந்த தளத்தில் Copy, Past செய்யக்கூடிய வகையில் அழகிய குறியீடுகளும் எண்கள், எழுத்துக்கள், குறியீடுகளை கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய வடிவங்களும் தரப்பட்டுள்ளன. (Text Art)

 பேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட்


  • மொபைல் போன்களுக்கு ஏற்றவாறான Copy, Past செய்யக்கூடிய உருக்களை பெற இங்கே சுட்டுக.
  • ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடியவாறான சிறிய உருக்களை பெற இங்கே சுட்டுக
குறியீடுகள்  ஸ்டேட்டஸ் அப்டேட்


முகநூல் நிலைத்தகவல்கள்

இவற்றை Copy செய்து பேஸ்புக் தளத்தின் ஊடாக பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்களை ஆச்சரியமடையச் செய்ய முடியும்.

மேலும் நீங்கள் எழுதக்கூடிய எழுத்துக்களை தலைகீழாகவும் குறுக்குக் கோடிட்ட வகையிலும், அதிக இடைவெளி விட்ட எழுத்துக்களாகவும், சுற்றி வட்டமிடப்பட்ட எழுத்துக்களாகவும் என இன்னும் பல அழகிய தோற்றங்களுக்கு மாற்றி அமைத்து அவற்றை மிக இலகுவாக Copy செய்து பேஸ்புக் தளத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள முடியும். 

மேற்குறிப்பிட்ட வகையில் நீங்கள் எழுதும் எழுத்துக்களை பல்வேறு வடிவங்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ள இங்கே சுட்டுக.


அத்துடன் இந்த தளத்தில் தரப்பட்டுள்ள FB Name எனும் பகுதி மூலம் வளைந்த நெளிந்த தோற்றங்களை கொண்ட ஆங்கில எழுத்துக்களை உருவாக்கி அவற்றை உங்கள் பேஸ்புக் பெயர்களுக்கு இடும் பொதுவான ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக பயன்படுத்தலாம். 

மேற்குறிப்பிட்டது போன்ற எழுத்துக்களை உருவாக்கிக் கொள்ள இங்கே சுட்டுக.


மேலும் இந்த தளத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அழகிய பல இமொஜி எனும் உருக்கள் தரப்பட்டுள்ளன இவற்றை பயன்படுத்தி உங்கள் பேஸ்புக் நிலைத்தகவல்களை (ஸ்டேட்டஸ் அப்டேட்) அலங்கரிக்க முடிவதுடன் அழகிய இமொஜிகளை பயன்படுத்தி அட்டகாசமான கருத்துரைகளை (Comment) இடவும் முடியும்.

இமொஜிகளை பெற இங்கே சுட்டுக

மேற்குறிப்பிட்ட அனைத்தும் நாம் எடுத்துக்காட்டுக்காக குறிப்பிட்டுக் காட்டியவைகளே இவைகள் தவிர இன்னும் ஏராளமான வசதிகளை குறிப்பிட்ட தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பயன்படுத்தித் தான் பாருங்களேன் 😊



Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top