ஆசஸ் ZenFone கோ (ZC451TG) எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது ஆசஸ் நிறுவனம்.

ஆசஸ் ZenFone கோ ஸ்மார்ட் போன்


ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது வெறும் 5.299 ரூபாய்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

4.5 அங்குல திரையை கொண்டுள்ள இது 1.3 GHz வேகத்தில் இயங்கக்கூடிய குவாட் கோர் மீடியாடெக் (MT6580M) ப்ராசசரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

மேலும்  இதில் 1 ஜிபி RAM தரப்பட்டுள்ளதுடன் 8 ஜிபி உள்ளக நினைவகமும் தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ். டி கார்டை பயன்படுத்தி இதன் நினைவகத்தை 64 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும். 

இவற்றுடன் இலவசமாக இரண்டு வருடங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கூகுள் டிரைவில் 100 ஜிபி இணைய சேமிப்பக வசதியும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆசஸ் (Asus) இணைய சேமிப்பகத்தில் 5 ஜிபி இடவசதியும் வழங்கப்படுகின்றது.


மேலும் இதில் ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் கூடிய 5 மெகாபிக்சல் பிரதான கேமரா தரப்பட்டுள்ளதுடன் 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர இதில் டூயல் சிம் வசதி தரப்பட்டுள்ளதுடன் வை-பை மற்றும் 3 ஜி வலையமைப்புகளுக்கான ஆதரவையும் இது கொண்டுள்ளது.

இணையத்தின் ஊடாக கொள்வனவு செய்ய விரும்புபவர்களுக்கு இதனை ஃப்ளிப்கார்ட் தளத்தின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top