இன்றைய ஸ்மார்ட் போன்கள் மூலம் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

மொபைல் Trace ஆப்ஸ்


பேமிலி லொக்கேட்டர் அப்ளிகேஷன்

அந்த வகையில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது "பேமிலி லொக்கேட்டர்" எனும் ஆண்ட்ராய்டு ஐபோன் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கான அப்ளிகேஷன்


மேலும் இதன் மூலம் உங்கள் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையவர்களை நீங்கள் விரும்பும் வகையில் தனித்தனி குழுக்களாக அமைத்துக் கொள்ளவும் அந்த குழுவில் இருக்கக்கூடிய அனைவருக்குமோ அல்லது ஒருவருக்கு மாத்திரமோ செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும். கீலுள்ள சுட்டியின் மூலம் இந்த செயலியை தரவிறக்கிக் கொள்க.


குழுவில் அங்கத்தவர்களை இணைப்பது எப்படி?

பேமிலி லொக்கேட்டர் ஆப்

இந்த செயலியின் மேற்பகுதியில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டுவதன் மூலம் பெறப்படும் Add Circle என்பதன் மூலம் உங்கள் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கான தனித்தனி குழுக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். (அவர்களும் பேமிலி லொக்கேட்டர் செயலியை நிறுவி இலவச கணக்கொன்றை ஆரம்பிக்கும் போது அவர்கள் உங்கள் குழுக்களில் தானாகவே இணைக்கப்படுவார்கள்.)


பேமிலி லொக்கேட்டர்


அது மாத்திரம் அல்லாது எமது ஸ்மார்ட் போனில் உள்ள பேமிலி லொக்கேட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி அவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு செல்லும் போதோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து வெளியேறும் போதோ தானாகவே ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தவும் செய்திடலாம். இதனை பின்வருமாறு மேற்கொள்ளலாம்.


1. முதலில் பேமிலி லொக்கேட்டர் அப்ளிகேஷனை தரவிறக்கி நிறுவிக்கொள்க பின் அதன் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட மெனு குறியீட்டை சுட்டும் போது தோன்றும் Reminders எனும் பகுதியை தெரிவு செய்க.


பேமிலி லொக்கேட்டர் ஆப்


2. பின் தோன்றும் சாளரத்தில் Remember to என்பதில் ஞாபகப்படுத்த வேண்டிய விடயத்தை உள்ளிட வேண்டும்.

பேமிலி லொக்கேட்டர் செயலி


3. Remind at location எனும் பகுதியின் மூலம் குறிப்பிட்ட விடயம் ஞாபகப்படுத்தப்பட வேண்டிய இடத்தை "வரைபடம்" Map மூலம் தெரிவு செய்யலாம். (இதன் போது குறிப்பிட்ட இடத்தில் இருந்து வெளியேறும் போது (Leaving) ஞாபகப்படுத்தப்பட வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது (Arriving)  ஞாபகபடுத்தப்பட வேண்டுமா? என்பதை தெரிவு செய்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.)


பேமிலி லொக்கேட்டர் செயலி


4. இனி கீழே தரப்பட்டுள்ள Notify Everyone என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட விடயத்தை குழுவில் இருக்கும் அனைத்து அங்கத்தவர்களுக்குமோ அல்லது நீங்கள் விரும்பும் ஒருவருக்கோ ஞாபகப்படுத்த செய்ய முடியும்.

மேலும் அவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து வெளியேறும் போதும் குறிப்பிட்ட இடத்திற்கு வரும் போதும் அதனை நீங்கள் (Notification) மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அமைத்துக் கொள்ளவும் முடியும்.

உதாரணத்திற்கு உங்கள் வீட்டிற்கு உங்கள் உறவினர்கள் நண்பர்கள் வரும் போது அதனை இந்த அப்ளிகேஷன் மூலம் தானாகவே அறிந்து கொள்ள முடியும். இதனை பின்வருமாறு மேற்கொள்ளலாம்.

1. பேமிலி லொக்கேட்டர் அப்ளிகேஷனின் வலது மேல் மூலையில் தளரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட மெனு குறியீட்டை சுட்டும் போது தோன்றும் Places என்பதை சுட்டுக.

முக்கிய இடங்கள்


2. பின் தோன்றும் சாளரத்தில் Add Location என்பதை சுட்டுக.

3. இனி குறிப்பிட்ட இடத்தை வரைபடத்தின் (Map) மூலம் தெரிவு செய்யலாம். 


குறிப்பு:

மேற்குறிப்பிட்ட வசதிகளை பெறுவதற்கு உங்கள் உறவினர்கள், நண்பர்களிடமும் GPS செயற்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும் என்பதுடன் அதில் பேமிலி லொக்கேட்டர் அப்ளிகேஷன் நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.

இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை உள்ளிட்டு இலவச கணக்கு ஒன்றை ஆரம்பித்தல் வேண்டும்.


இந்த செயலி மூலம் பூரண பயன்களை பெற மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு சந்தர்பங்களிலும் GPS செயற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top