ஒரு சில ஆண்டுகளுக்கு முன், வீடியோ கோப்பு ஒன்றுக்கு அழகிய விளைவுகளை ஏற்படுத்தி அதற்கு பின்புல ஒலிகளை வழங்கி அழகிய வீடியோ கோப்பு ஒன்றை தயாரித்துக்கொள்ள வேண்டும் எனின் நாம் கணினிகளையே நாட வேண்டி இருந்தது. அதுவும் சற்று கணினியில் அனுபவம் பெற்றவர்களாலேயே முடிந்தது.

வீடியோ எடிட்டிங்


எனினும் இன்றோ நிலைமை மாறிவிட்டது...

எமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மூலமாகவே அழகிய வீடியோ கோப்புக்களை உருவாக்கிக்கொள்ளும் காலம் இது.

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் கீன்மாஸ்டர்


அந்த வகையில் எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை பயன்படுத்தி எந்த ஒருவராலும் மிக இலகுவாக வீடியோ கோப்புக்களை எடிட்டிங் செய்வதற்கு உதவுகிறது கீன்மாஸ்டர் எனும் செயலி

பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தி வரப்படும் இந்த செயலி மூலம் உங்கள் புகைப்படங்களைக் கொண்டு மிகக்குறுகிய நேரத்திலேயே அழகிய வீடியோ கோப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.


இதன் மூலம் வீடியோ எடிட்டிங் செய்வது எப்படி?


இந்த செயலியில் தரப்பட்டுள்ள + குறியீட்டை கொண்ட பட்டனை அழுத்துவதன் மூலம் Get Started மற்றும் Skip என இரு பட்டன்கள் தோன்றும்.

Mobile வீடியோ எடிட்டிங்


நீங்கள் இந்த செயலியை முதல் தடவையாக பயன்படுத்துபவர் எனின் Get Started எனும் பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் வீடியோ எடிட்டிங் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.

கீன்மாஸ்டர் வீடியோ எடிட்டிங்


நீங்கள் Get Started எனும் பட்டனை சுட்டியவுடன் நீங்கள் உருவாக்கும் புதிய வீடியோ கோப்பிற்கான ஒரு பெயரை இடுவதற்கான சாளரம் தோன்றும் அதன் மூலம் நீங்கள் விரும்பும் பெயரை குறிப்பிட்ட வீடியோ கோப்புக்கு உள்ளிட்டுக் கொள்ளலாம்.

கீன்மாஸ்டர் ஆண்ட்ராய்டு


அவ்வாறு நீங்கள் உள்ளிட்டிட்ட பின் தோன்றும் சாளரத்தின் மூலம் வீடியோ கோப்பில் தோன்ற வேண்டிய புகைப்படங்களை தெரிவு செய்வதற்கான சாளரம் தோன்றும் (Media Browser) இந்த பகுதி மூலம் நீங்கள் வீடியோ கோப்பில் தோன்றச்செய்ய வேண்டிய புகைப்படங்களை தெரிவு செய்ய வேண்டும்.

கீன்மாஸ்டர் எடிட்டிங்


பின்னர் குறிப்பிட்ட சாளரத்தின் வலது கீழ் மூளையில் தோன்றும் Next பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் வீடியோ கோப்புக்களுக்கு நகரும் விளைவுகளை (Theme) ஏற்படுத்துவதற்கான சாளரம் தோன்றும். குறிப்பிட்ட சாளரத்தின் மூலம் நீங்கள் விரும்பும் ஒரு விளைவை உங்கள் வீடியோ கோப்புக்கு உள்ளிடலாம் (இதில் தரப்பட்டுள்ளவைகள் தவிர புதிய தீம்களை தரவிறக்க விரும்பினால் இணைய இணைப்பு அவசியம்.)

கீன்மாஸ்டர் செயலி


இனி Next பட்டனை அழுத்தும் போது தோன்றும் சாளரத்தின் மூலம் வீடியோ கோப்பு இயங்கும் போது வாசகங்களை தோன்றச் செய்வதற்கான சாளரம் தோன்றும். அவ்வாறு வாசகங்களை உள்ளிட்டுக்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட சாளரத்தின் மூலம் உளிட்ட பின் Next பட்டனை அலுத்துக.


வீடியோவில் பின்னணி பாடல்கள்


பின்னர் உங்களுக்கு கிடைக்கும் சாளரத்தின் மூலம் நீங்கள் விரும்பும் பின்னணி இசைகளையோ பாடல்களையோ தெரிவு செய்து உங்கள் அதில் தோன்றும் + பட்டனை அலுத்துவதன் மூலம் அவற்றை உங்கள் வீடியோ கோப்புக்கு பின்னணி ஒலியாக இட்டுக்கொள்ளலாம்.


வீடியோ உருவாக்கல்


இனி Next என்பதை அழுத்த உங்கள் வீடியோ கோப்பு தயாராகி இருக்கும். இனி Play பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் உருவாக்கிய வீடியோ கோப்பினை இயக்கிப் பார்க்க முடியும்.இறுதியாக அதனை உங்கள் கேலரியில் சேமித்துக்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட செயலியின் இடது பக்கத்தில் தரப்பட்டுள்ள Share பட்டனை அழுத்தும் போது தோன்றும் சாளரத்தில் Save video to gallery என்பதை சுட்டுவதன் மூலம் அதனை உங்கள் கேலரியில் சேமித்துக்கொள்ளலாம்.


உதவிக்குறிப்புகள்:

இறுதியாக உங்களுக்கு கிடைக்கும் Timeline மூலம் நீங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள், எழுத்துக்கள், பின்னணி இசைகள், பாடல்கள் போன்றவற்றையும் அவதானிக்கலாம். அவற்றை சுட்டுவதன் மூலம் அதன் தோற்றங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடிவதுடன் அவைகள் எவ்வளவு நேரம் இயங்க வேண்டும், எந்த வேகத்தில் இயங்க வேண்டும், அவைகள் எவ்வாறான அனிமேஷன் விளைவுகளை கொண்டிருக்க வேண்டும் என்பன போன்ற ஏராளமான வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த செயலியில் தரப்பட்டுள்ள மைக்ரோபோன் குறியீட்டை சுட்டுவதன் மூலம் நீங்கள் எடிட் செய்யும் வீடியோ கோப்பில் உங்கள் குரல் பதிவுகளையும் இணைத்துக்கொள்ளலாம்.

இலவச பதிப்பு மூலம் நீங்கள் உருவாக்கும் வீடியோ கோப்புக்களில் கீன்மாஸ்டர் என்ற Watermark தோன்றும் இதனை நீங்கள் நீக்கிக் கொள்ள விரும்பினால் சந்தா அடிப்படையில் இணைய வேண்டும்.
  • சாந்தா - Subscription
  • சாளரம் - Window
  • புகைப்படம் - Picture/Photo
  • செயலி - Application 

இந்த செயலி  ஆண்ட்ராய்டு 4.1.2 (Jelly Bean) பதிப்பை கொண்ட அல்லது அதற்குப் பின்னர் வந்த பதிப்புக்களில் இயங்கும்.

பதிவின் நீளம் கருதி இவைகளை நாம் விரிவாக விளக்கவில்லை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.


தொடர்புடைய இடுகை:


இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான விளக்கத்திற்கு உங்கள் கருத்து என்ன?
  • அவசியமானது.
  • அவசியமற்றது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top