ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்கள் மூலமாக புகைப்படங்களை அழகு அதில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள கூகுள் நிறுவனத்தின் "ஸ்னேப்சீட்" செயலி அருமையான பல வசதிகளை தருகிறது.


ஸ்னேப்சீட் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்
எனினும் இதனை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியதை அடுத்து இந்த செயலியை எந்த ஒருவராலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தியது.


இதனை தொடர்ந்து கூகுள், இந்த செயலியில் பல்வேறு மேம்படுத்தல்களை மேற்கொண்டு வந்தது.

அந்த வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்னேப்சீட் செயலியின் பதிப்பில் RAW வடிவில் அமைந்த புகைப்படங்களையும் எடிட் செய்து கொள்வதற்கான வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

RAW வடிவில் அமைந்த புகைப்படங்கலானது JPEG வடிவங்களில் அமைந்த புகைப்படங்களை விடவும் அதிக தெளிவை கொண்டுடிருக்கும் எனவே புகைப்படவியலாளர்கள் தெளிவான புகைப்படங்களை பிடிப்பதற்கு RAW வடிவங்களையே பயன்படுத்துகின்றனர்.

மேலும் புகைப்படங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதை மென்மேலும் தொளிவாகவும் அழகாவும் மாற்றிக்கொள்ள உதவும் இந்த செயலியின் புதிய பதிப்பில் இன்னும் பல வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

நீங்களும் இதன் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்வதற்கு கீழுள்ள இணைப்பில் செல்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top