இது Siam 7x எனும் இரு பக்க திரைகளை கொண்ட ஸ்மார்ட் போன் ஆகும்.

சயம் 7 எக்ஸ் ஸ்மார்ட் போன்

1280 x 720 pixel Resolution இல்அமைந்த 5 அங்குல Full HD பிரதான திரையை கொண்டுள்ள இது 4.7 அங்குல E Ink எனும் இரண்டாவது திரையையும் கொண்டுள்ளது.

இது குவாட் கோர் மீடியாடெக் (MTK6735A) ப்ராசசரை கொண்டுள்ள அதேநேரம் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.


இவற்றுடன் 16 மெகா பிக்சல் பிரதான கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா போன்றவற்றையும் இது கொண்டுள்ளது.
இவைகள் தவிர இரண்டு சிம் அட்டைகளை பயன்படுத்துவதற்கான வசதி மற்றும் 4G வலையமைப்புகளுக்கான ஆதரவு போன்றவற்றை கொண்டுள்ள இதன் விலை 470 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது.


இருபக்க திரைகளை கொண்டதாக ஏற்கனவே சந்தையில் இருக்கும் யோடா போனிற்கு போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top