எமக்குத் தேவையான ஆவணங்களை மிக இலகுவாகவும் நேர்த்தியாகவும் தயாரித்துக் கொள்ள மைக்ரோசாப்ட் தரும் Microsoft Office எனும் மென்பொருள் எமக்கு மிகவும் துணை புரிகிறது.

கூகுள் குரோம் மைக்ரோசாப்ட் Extension


ஆரம்பத்தில் இந்த மென்பொருளை கணினி மூலம் மட்டுமே பயன்படுத்த முடிந்த முடிந்தது. எனினும் இன்று ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் ஊடாகவும் பயன்படுத்த முடிவதுடன் மென்பொருள்களின் உதவி இன்றி நேரடியாக இணையத்தின் ஊடாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதனை மேலும் இலகுபடுத்தும் வகையில் கூகுள் குரோம் இணைய உலாவிக்கான Microsoft Office நீட்சியையும் (Extension) வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.


இந்த செயலியை கூகுள் குரோம் இணைய உலாவியில் நிறுவியதன் பின் உங்கள் மைக்ரோசாப்ட் கணக்கை பயன்படுத்தியோ அல்லது புதியதொரு கணக்கை உருவாக்குவதன் மூலமோ குறிப்பிட்ட நீட்சியில் இருந்து பின்வரும் வசதிகளை பெற முடியும்.

இந்த நீட்சியை கூகுள் குரோம் இணைய உலாவியில் நிறுவுவதன் மூலம் குறிப்பிட்ட இணைய உலாவியில் இருந்தவாறே Microsoft Word, Excel, PowerPoint, OneNote ஆகிய எந்த ஒரு ஆவணத்தையும் உடனடியாக உருவாக்கிக் கொள்வதற்கான வசதியை பெற முடியும்.

கூகுள் குரோம் மைக்ரோசாப்ட் நீட்சி


இந்த நீட்சியை கூகுள் குரோம் இணைய உலாவியில் நிறுவிய பின் குறிப்பிட்ட இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தோன்றும் Microsoft Office குறியீட்டை சுட்டுவதன் மூலம் புதிய Microsoft Word, Excel, PowerPoint, OneNote ஆவணங்களை உடனடியாக உருவாக்கிக் கொள்வதற்கான வசதியை பெற முடியும்.


மேலும் குறிப்பிட்ட நீட்சியில் தரப்பட்டுள்ள Open என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் கணினியில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட Microsoft ஆவணங்களை திறந்து அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.

நீங்கள் கணினி மூலம் அடிக்கடி Microsoft ஆவணங்களை பயன்படுத்துபவர் எனின் உங்களுக்கு இந்த நீட்சி பெரிதும் பயனுள்ளதாக அமையும்.


நீங்களும் இதனை உங்கள் கூகுள் குரோம் இணைய உலாவிக்கு நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top