புகைப்படம் ஒன்றில் இருக்கக்கூடிய ஒரு நபரின் "வயது என்ன?" என்பதை அறிந்து கொள்வதற்காக மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருந்த இணையதளம் பற்றி நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.


உணர்வுகளை அடையாளப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம்.


தற்பொழுது புகைப்படத்தில் உள்ள ஒருவரின் உணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியவகையில் Emotion Recognition எனும் இணையதளத்தை வடிவமைத்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.


இந்த தளத்துக்குச் சென்று புகைப்படங்களை உள்ளிடுவதன் மூலம் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்களின் உணர்வுகள், அதாவது "கோபம்", "பயம்", "அவமதிப்பு",  "அருவருப்பு", "மகிழ்ச்சி", "நடுநிலை", "வருத்தம்", "ஆச்சரியம்" போன்றவற்றில் எவ்வாறான உணர்வுகளை கொண்டுள்ளனர் என்பதை துல்லியமாக அடையாளப்படுத்துகிறது இந்த இணையதளம்.

இந்த தளத்தை பயன்படுத்துவது எப்படி?


இந்த தளத்துக்கு சென்று Open Image எனும் குறியீட்டை அழுத்துவதன் மூலம் உங்கள் கணினியில் இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்றை இந்த தளத்துக்கு உள்ளிட்டுக் கொள்ளலாம்.அல்லது அதற்கு அருகில் தரப்பட்டுள்ள கட்டத்தில் இணையத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் இணைய முகவரியை உள்ளிடுவதன் மூலம் அந்த புகைப்படத்தை குறிப்பிட்ட தளத்துக்கு உள்ளிட்டுக் கொள்ளலாம்.

பின் குறிப்பிட்ட தளத்தில் தோன்றும் உங்கள் புகைப்படத்தின் மேல் மவுஸ் கர்சரை (Cursor) நகர்த்தும் போது தோன்றும் கட்டத்தில் குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ள நபரின் முகத்தோற்றத்தில் "கோபம்", "பயம்", "அவமதிப்பு",  "அருவருப்பு", "மகிழ்ச்சி", "நடுநிலை", "வருத்தம்", "ஆச்சரியம்" போன்ற உணர்வுகள் எந்த அளவு வெளிப்படுத்தப்படுகிறது என்பதை இந்த தளம் அடையாளப்படுத்தும்.

அவ்வாறு வெளிப்படுத்தப்படும் முடிவுகளானது புள்ளிவிபர அடிப்படையில் அமைந்துள்ளது.அதாவது குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தில் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சியானது முற்றிலும் மகிழ்ச்சியாக அமைந்திருந்தால் இந்த தளத்தில் வெளிப்படுத்தப்படும் முடிவுகளில் Happiness 1.00000 என்று அமையும். அதே போல் புகைப்படத்தில் உள்ள நபரின் தோற்றத்தில் அரைவாசி பயமும் அரைவாசி கோபமும் இருப்பின் இந்த தளத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் முடிவானது Anger 0.50000, Fear 0.50000 என அமையும்.

இதனடிப்படையில் ஒவ்வொரு புகைப்படத்தினதும் உணர்வுகள் கணிப்பிடப்படுகிறது.

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top