அண்மையில் Huawei Honor 5X எனும் ஸ்மார்ட் போனை Huawei நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

Huawei-ஸ்மார்ட்-போன்


இதனை தொடர்ந்து Huawei G7 Plus எனும் ஸ்மார்ட் போனையும் அறிமுகப்படுத்துகிறது Huawei நிறுவனம்.




இந்த ஸ்மார்ட் போனானது 5.5 அங்குல Full HD திரையை கொண்டுள்ளது.

மேலும் 1.5GHz வேகத்தை உடைய ஆக்டா கோர் Snapdragon 616 ப்ராசசரை கொண்டியங்கும் இது 3 ஜிபி  RAM ஐ கொண்டுள்ளதுள்ளது 

32 ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு microSD Card ஐ பயன்படுத்தி அதிகரித்துக் கொள்ள முடியும்.


இவற்றுடன் 13 மெகா பிக்சல் தெளிவுத் திறனில் அமைந்த பிரதான கேமராவை இது கொண்டிருப்பதுடன் 5 மெகா பிக்சல் தெளிவுத் திறனில் அமைந்த முன்பக்க கேமராவையும் இது கொண்டுள்ளது.


இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது எனினும் இதற்கான மார்ஷ்மல்லோ மேம்படுத்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவைகள் தவிர இரண்டு சிம் அட்டைகளை பயன்படுத்துவதற்கான வசதி இதில் வழங்கப்பட்டுள்ளதுடன் 4G வலையமைப்புக்கு ஆதரவளிக்கும் வசதியையும் இது கொண்டுள்ளது.

அத்துடன் 152.5 மில்லிமீட்டர் நீளம் 76.5 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 7.5 தடிப்பு போன்றவற்றை கொண்டுள்ள இதன் நிறை  167 கிராம் ஆகும்.

90 சதவீதம் உலோத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் Fingerprint Sensor வசதி பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதன் விலை 330 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 21,800 இந்திய ரூபாய்கள் ஆகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top