"இணையத்தில் இல்லாத ஒரு தகவலே இல்லை" எனும் அளவுக்கு இணையத்தில் ஏராளமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

கூகுள் பாதுகாப்பான தேடல் முறை


இருப்பினும் நாம் தேடும் தகவல் இருக்கக்கூடிய ஒரு இணையதளத்தை அடைந்து கொள்வதற்கு கூகுள், பிங் போன்ற தேடியந்திரங்கள் இன்றியமையாதவைகள் ஆகும்.


அந்த வகையில் இணையத்தின் மூலம் பல பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தாலும் அதன் மறுபக்கம் பார்க்கையில் பல அருவருக்கத்தக்க விடயங்களும் கூடவே இருக்கின்றன.

எனவே இணையத்தின் மூலம் நாம் தகவல்களை தேடிப்பெருவதற்கு பிரதானமாக பயன்படுத்தக் கூடிய கூகுள் தேடியந்திரத்தின் மூலம் தகவல்களை தேடும் போது ஆபாசமான தகவல்கள் தோன்றாமல் தடுத்துக் கொள்ளவும் முடியும்.


இதனை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.


நீங்கள் இணையத்தை உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் பயன்படுத்துபவர் எனின்.


  • உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள இணைய உலாவியை பயன்படுத்தி கூகுளின் முகப்புப்பக்கத்திற்கு செல்க.

கூகுள் தேடல் அமைப்புக்கள்

  • இனி குறிப்பிட்ட பக்கத்தில் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Settings ===> Search Settings என்பதை சுட்டுக.

ஸ்மார்ட் போனில் கூகுள் அமைப்புக்கள்
  • பின்னர் தோன்றும் சாளரத்தில் SafeSearch Filters என்பதற்குக் கீழ் இருக்கும் Filter explicit results என்பதை தெரிவு செய்க.  • பின்னர் குறிப்பிட்ட பக்கத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Save என்பதை சுட்டி வெளியேறுக 

அவ்வளவுதான்.தொடர்புடைய இடுகைகள்:


நீங்கள் கணினி மூலம் இணையத்தை பயன்படுத்துபவர் எனின் கணினியில் கூகுள் தேடல் அமைப்புக்கள்

  • பின் குறிப்பிட்ட பக்கத்தில் இருக்கும் SafeSearch Filters என்பதற்குக் கீழ் இருக்கும் Turn On SafeSearch என்பதை Tick செய்க.

கூகுள் தேடல் அமைப்புக்கள்

  • இனி குறிப்பிட்ட பக்கத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Save என்பதை சுட்டுக.

அவ்வளவுதான்.


இன்று கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை சிறார்களும் சர்வ சாதரணமாக பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. எனவே இந்த வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் சிறார்கள் தவறான முறையில் இணையத்தை பயன்படுத்துவதில் இருந்தும் அவர்களை பாதுகாத்திட முடியும்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

2 comments:

 
Top