உங்கள் புகைப்படங்களை ஓவியம் போல் மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா?

ஓவியங்களுக்கான இணையதளம்

அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது "டீப்ஆர்ட்" (Deepart) எனும் இணையதளம்.இந்த தளத்தில் தரப்பட்டுள்ள ஓவியங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓவியத்தை தெரிவு செய்து அதே பாங்கில் உங்கள் புகைப்படத்தை மாற்றியமைத்துக் கொள்ள உதவுகிறது இந்த இணையதளம்.

இந்த தளத்தை பயன்படுத்துவது எப்படி?

கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் குறிப்பிட்ட தளத்துக்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் இலவச கணக்கு ஒன்றை ஆரம்பித்துக் கொள்க.

பின் குறிப்பிட்ட தளத்தின் முகப்புப்பக்கத்தில் "Choose your style" என்பதற்குக் கீழ் தரப்பட்டுள்ள ஓவியங்களில் உங்களுக்கு பிடித்த ஓவியம் ஒன்றை தெரிவு செய்க.

Deepart இணையதளத்தை பயன்படுத்தும் முறை


இனி தோன்றும் சாளரத்தில் Content என்பதற்குக் கீழ் தரப்பட்டுள்ள Upload Button ஐ சுட்டுவதன் மூலம் உங்கள் கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் உள்ள ஒரு புகைப்படத்தை இந்த தளத்துக்கு தரவேற்றிக்கொள்க.

பின்னர் Submit Button ஐ அலுத்துக, அவ்வளவு தான் 

ரஜனி


இனி சிறிது நேரத்தின் பின்னர் உங்கள் ஓவியம் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். (இவ்வாறு அனுப்பி வைப்பதற்கு 40 தொடக்கம் 50 நிமிடங்கள் வரை ஆகலாம்)

உபாயம் (Tips): 

குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள ஓவியங்களுக்கு பதிலாக நீங்கள் விரும்பும் வேறொரு ஓவியத்தின் தோற்றத்திலும் உங்கள் புகைப்படங்களை மாற்றி அமைக்கலாம். 

இதற்கு கூகுள் தளத்தில் Painting என்றோ அல்லது "ஓவியம்" என்றோ தட்டச்சு செய்து புகைப்படங்களை தேடுவதன் மூலம் உங்களுக்கு பிடித்த ஓவியத்தின் பாங்கை தெரிவு செய்யலாம்.

பின் குறிப்பிட்ட ஓவியத்தை இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Style என்பதற்குக் கீழும் உங்கள் புகைப்படத்தை Content என்பதற்குக் கீழும் உள்ளிடுவதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த அந்த ஓவியத்தின் பாங்கில் உங்களது புகைப்படத்தை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

உபாயம் 2:

டீப்ஆர்ட் இணையதளத்தின் மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களை ப்ரிஸ்மா செயலியின் மூலம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனின். ப்ரிஸ்மா மூலம் உருவாக்கிய புகைப்படம் ஒன்றை டீப்ஆர்ட் தளத்தில் உள்ளிடுக. மேற்கூறியவாறு.
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top