அழகிய ஒட்டுக்களையும் (Sticker) கேலிச்சித்திரங்களையும் தமிழ் மொழியில் உறுவாக்கி அதனை பேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் பிளஸ் ஆகிய வலைதளங்களின் ஊடாக உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ விரும்புகிறீர்களா?அப்படியானால் கண்ணை கவரும் விதத்தில் அட்டகாசமான நகைச்சுவையான கேலிச் சித்திரங்களையும் ஓட்டுக்களையும் (Stickers) உருவாக்கிக் கொள்ள உதவுகிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான Bobble எனும் செயலி.


எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த செயலியை நிறுவிய பின் இதனை திறக்கும் போது தோன்றும் சாளரத்தின் ஊடாக உங்கள் புகைப்படங்களை எடுத்து இந்த செயலிக்கு உள்ளிட்டுக் கொள்ள முடியும்.ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை உள்ளிட்டுக்கொள்ள விரும்பினால் இந்த செயலியின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளால் ஆன மெனு Button ஐ சுட்டும் போது தோன்றும் Heads என்பதன் ஊடாக உள்ளிட்டுக் கொள்ள முடியும்.இனி இந்த செயலியின் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள Stickers என்பதை  சுட்டுவதன் மூலம் அழகிய பல ஒட்டுக்கள் தோன்றுவதை அவதானிக்கலாம். அவற்றுள் நீங்கள் விரும்பும் வாசகங்களை சேர்த்துக் கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட பக்கத்தின் மேற்பகுதியில் தோன்றும் கட்டத்தில் நீங்கள் விரும்பும் வாசகங்களை தமிழ் மொழியிலேயே இட்டுக் கொள்ளலாம்.அதே போல் இந்த செயலியின் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள Stories எனும் பகுதி மூலம் ரஜினிகாந்த், பராக் ஒபாமா, விராட் கோலி போன்ற இன்னும் பல உலக பிரபலங்களின் முகங்களுடன் எமது முகங்களையும் ஒன்றிணைத்து  கருத்தாழம் மிக்க , நகைச்சுவையான, வேடிக்கையான கேலிச்சித்திரங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.இவ்வாறு நாம் உருவாக்கும் ஒட்டுக்கள் மற்றும் கேலிச்சித்திரங்களை வாட்ஸ்அப் மூலம் மிக இலகுவாக பகிர்ந்து கொள்வதற்கான Chat Head வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. (கீழே படத்தில் உள்ளவாறு)இவைகள் தவிர  இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை பின்வரும் இணைப்பு மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.குறிப்பு: இந்த செயலி இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள இணைப்பு மூலம் குறிப்பிட்ட செயலியின் APK கோப்பை தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ளலாம்.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top