HI






இன்று அறிமுகப்படுத்தப்படக்கூடிய அனைத்து ஸ்மார்ட் போன்களும் சிறந்த புகைப்படங்களை பிடிப்பதற்கு ஏற்ற வகையில் அதிகளவு மெகாபிக்சல்களை கொண்ட கேமராவுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.



எனவே நாம் பிடிக்கக்கூடிய புகைப்படங்கலானது தெளிவானதாக அமைந்திருந்தாலும் கூட அவைகள் அதிக அளவை கொண்டதாக அமைந்து விடுகின்றன.


அதாவது நாம் 5 மெகா பிக்சல் கேமராவை கொண்ட ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தி பிடிக்கக்கூடிய புகைப்படங்கள் கிட்டத்தட்ட 2-3 MB வரை அமைந்துவிடும் அதேநேரம் அதனை விட அதிக மெகா பிக்சல்களை கொண்ட ஸ்மார்ட் போங்கள் மூலம் புகைப்படங்களை பிடிக்கும் போது அவைகள் 5 MB ஐ விடவும் அதிக அளவை எடுத்துக் கொள்கின்றன.

குறிப்பிட்ட ஒரு புகைப்படம் இவ்வாறு அதிக அளவில் அமைவதால் அவற்றை எமது ஸ்மார்ட் போனில் சேமிக்க அதிக அளவு இடம் தேவைப்படுவதுடன் அவற்றை பேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைதளங்களின் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் போன்ற ஏனைய வழிகளிலோ பகிர்ந்து கொள்வதும் சிரமமான விடயமாக அமைந்து விடுகிறது.

புகைப்படங்களின் அளவை குறைத்துக்கொள்ள உதவும் "க்ராம்" செயலி 


ஆகவே குறிப்பிட புகைப்படத்தின் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் அதன் அளவை மாத்திரம் குறைத்துக்கொள்ள உதவுகிறது "க்ராம்"  எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான அப்ளிகேஷன்.

இந்த செயலியை எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களின் அளவுகளை குறைத்துக்கொள்ளவும் முடிகிறது.


தொடர்புடைய இடுகை:

இதனை பயன்படுத்துவது எப்படி?

  • கீழுள்ள இணைப்பின் மூலம் இந்த செயலியை தரவிறக்கி உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள் 
ஆண்ட்ராய்டு செயலி க்ராம்


  • பின்னர் குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டிருக்கும் Cram It! என்பதை சுட்டுக.
Image Compress Android Application


  • இனி தோன்றும் சாளரத்தின் மூலம் நீங்கள் அளவை குறைத்துக்கொள்ள விரும்பும் புகைப்படங்களை தெரிவு செய்க.
Android புகைப்பட சுருக்கி


  • இனி குறிப்பிட்ட சாளரத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டிருக்கும் Cram it என்பதை சுட்டுக.


அவ்வளவுதான்..!

இனி குறிப்பிட்ட புகைப்படம் Cram It எனும் கோப்புறையில் சேமிக்கப்படும். 


இருந்தபோதிலும்  இந்த செயலி மூலம் ஆகக்கூடியது 300 புகைப்படங்களின் அளவுகளையே இலவசமாக சுருக்கிக் கொள்ள முடியும். அதற்கு மேல் தேவைப்படின் இதன் கட்டண பதிப்பை பயன்படுத்த வேண்டும்.

எனினும் சிறியதொரு உபாயத்தை பயன்படுத்தி இதன் மூலம் எத்தனை புகைப்படங்களின் அளவுகளையும் சுருக்கிக் கொள்ள முடியும்.

எமது முகநூல் பக்கத்திலுள்ள செய்திகளை See First எனும் வசதியை பயன்படுத்தி தவறாமல் பெறுபவர்களுக்கு இந்த உபாயத்தை அனுப்பி வைக்க உள்ளோம்.




நீங்களும் எமது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தின் பதிவுகளை தவறாமல் பெற See First வசதியை செயற்படுத்தியிருப்பவர் எனின் கீழுள்ள பேஸ்புக் பதிவில் அதற்கான Screenshot ஐ Comment செய்க. உங்களுக்கான உபாயத்தை மிக விரைவில் நாம் அனுப்பி வைப்போம்.



இந்த செயலியை தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பை சுட்டுக.



தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

1 comments:

 
Top