இன்று அதிகமானவர்களால் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஸ்மார்ட் போனில் குறைபாடுகள் உள்ளதா?


அந்தவகையில் நீங்களும் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன் போன் ஒன்றை வைத்திருப்பவர் எனின் அல்லது புதியதொரு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போனை பாவனைக்கு வாங்க இருப்பவர் எனின் அதில் இருக்கக் கூடிய பின்வரும் வசதியானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அதாவது குறிப்பிட்ட ஸ்மார்ட் போனில்  *#0*#  எனும் இரகசிய இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் குறிப்பிட்ட ஸ்மார்ட் போன் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் சோதித்து அறிந்துகொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட இலக்கத்தை நீங்கள் உங்களது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போனில் உள்ளிட்ட பின் கீழே படத்தில் உள்ளவாறான ஒரு சாளரம் உங்களுக்கு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி மறைந்துள்ள வசதி


இனி அதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போன் தொடர்பான அனைத்து விடயங்களையும் சோதித்து அறிய முடியும் 

உங்கள் ஸ்மார்ட் போனில் தோன்றும் வர்ணங்களில் குறைபாடுகள் இருப்பதை போல் நீங்கள் உணர்ந்தால் இந்த சாளரத்தில் தோன்றும் Red, Green, Blue என்பவற்றின் மூலம் அதனை சோதித்து அறிந்து அதிலுள்ள குறைபாட்டை உறுதி செய்து கொள்ளலாம்.

தொடுதிரை சோதித்தல்


மேலும் சில ஸ்மார்ட் போன்களின் திரையில் சில இடங்கள் தொடுகை உணர்வு (Touch) அற்றதாக, பழுதடைந்தவைகளாக இருக்கலாம் இது போன்ற குறைபாடுகளை அறிந்து கொள்வதற்கு குறிப்பிட்ட சாளரத்தில் தோன்றும் Touch என்பதை பயன்படுத்தலாம்.


அதே போன்று உங்கள் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய கேமரா, மைக்ரோஃபோன், வைப்ரேஷன், ஸ்பீக்கர், சென்சார்  போன்ற இன்னும் பல வசதிகளை தனித்தனியாக சோதித்து அறிந்து கொள்வதர்கான வசதி இந்த சாளரத்தில் தரப்பட்டுள்ளது.


அத்துடன் *#7353# எனும் இரகசிய குறியீட்டை உள்ளிடுவதன் மூலமும் மேற்குறிப்பிட்ட அம்சங்களை சோதித்தறிய முடியும்.தொடர்புடைய இடுகைகள்:

Love to hear what you think!

1 comments:

 
Top