சியோமி மீ பேட் 2 எனும் டேப்லெட் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ரெட்மி நோட் 3 எனும் ஸ்மார்ட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

சியோமி ஸ்மார்ட் போன்


சில மாதங்களுக்கு முன் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய ரெட்மி நோட் 2 எனும் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரெட்மி நோட் 3 எனும் இந்த ஸ்மார்ட் போனானது உலோகத்திலான சுற்றுப்புறத்தை கொண்டிருக்கும் அதேவேலை பிங்கர்பிரிண்ட் வசதியையும் கொண்டுள்ளது.

அத்துடன் நீண்ட நேரம் இயங்குவதற்கு ஏற்ற வகையில் இதில் 4000mAh வலுவுடைய பேட்டரியும் தரப்பட்டுள்ளது.

5.5 அங்குல திரையை கொண்டுள்ள இது மீடியடெக் ஹீலியோ எக்ஸ் 10 எனும் ப்ராசசரை கொண்டுள்ளது.

மேலும் ரெட்மி நோட் 3 எனும் இந்த ஸ்மார்ட் போன் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளது, இதில் 16 ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள ஸ்மார்ட் போன் 2 ஜிபி Ram ஐயும் 32 ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள ஸ்மார்ட் போன் 3 ஜிபி Ram ஐயும் கொண்டுள்ளன.


இவற்றுடன் 5 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட முன்பக்க கேமராவும் 13 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமராவும் இதில் தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர 4ஜி வலையமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் வசதி, வை-பை, ப்ளுடூத் 4.0, டூயல் சிம் பயன்படுத்துவதற்கான வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளது.

இதன் 16 ஜிபி பதிப்பு $140 அமெரிக்க டொலர்களாகவும் 32 ஜிபி பதிப்பு 172 அமெரிக்க டொலர்களாகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது. இது முறையே 9300 மற்றும் 11500 இந்திய ரூபாய்கள் ஆகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top