மீ பேட் 2 எனும் டேப்லெட் சாதனத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.


Xiaomi Mi Pad 2


6.95 மில்லிமீட்டர் தடிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இது  7.9 அங்குல IPS LCD திரையை கொண்டுள்ளது.


மேலும் 2.24GHz வேகத்தில் இயங்கக்கூடிய குவாட் கோர் 64-bit ப்ராசசர் மற்றும் 2GB RAM போன்றவற்றையும் இது கொண்டுள்ளது.

128 ஜிபி வரையான மைக்ரோ எஸ்.டி கார்ட் நினைவகத்திற்கு ஆதரவளிக்கும் இது 16 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளது.

அத்துடன் இதில் 5 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட முன் பக்க கேமரா தரப்பட்டுள்ளதுடன் 8 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமரா தரப்பட்டுள்ளது.


மேலும் இது ஆண்ட்ராய்டு லாலிபாப் மற்றும் விண்டோஸ் 10 ஆகிய இயங்குதளங்களை கொண்டு இயங்கும் இருவேறு பதிப்புக்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் டேப்லெட் சாதனம் 64 ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டதாகும்)

இவைகள் தவிர நீண்ட நேரம் இயங்குவதற்கு ஏற்ற வகையில் 6190mAh  வலுவுடைய பேட்டரியை இது கொண்டுள்ளதுடன் USB Type-C port, மற்றும் வை-பை, ப்ளூடூத் ஆகிய வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளது.

இதன் விலை 1,299 யுவான்கலாக குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 13500 இந்திய ரூபாய்கள் ஆகும்.

Love to hear what you think!

1 comments:

 
Top