கணினியில் இருக்கக் கூடிய வீடியோ கோப்புக்களை எமது தேவைக்கு ஏற்றார்போல் மாற்றியமைப்பதற்கு என "வின் எக்ஸ் எச்.டி வீடியோ கன்வெர்ட்டர்" சிறந்த வசதிகளை தருகிறது. இதன் மூலம் வீடியோ கோப்புக்களை ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மிக இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும். 


அதாவது உங்கள் கணினியில் உள்ள வீடியோ கோப்புக்கள் உங்களது ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது விண்டோஸ் போன் போன்ற இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் சாதனங்களில் முறையாக இயங்காத போது அந்த வீடியோ கோப்புக்களை குறிப்பிட்ட சாதனத்தில் இயங்குவதற்கு ஏற்றார்போல் மாற்றியமைக்க இந்த மென்பொருள் உங்களுக்கு பெரிதும் உதவியாக அமையும்.

மேலும் இதில் 400 இற்கும் மேற்பட்ட ஸ்மார்ட் சாதனங்களின் வகைகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதியானது நீங்கள் வீடியோ கோப்புக்களின் வடிவத்தை (Formats) மாற்றியமைக்கும் போது உங்கள் ஸ்மார்ட் சாதனத்துக்கு மிகவும் பொருத்தமான வடிவத்தை தெரிவு செய்ய இலகுவானதாக அமையும்.அத்துடன் இந்த மென்பொருள் மூலம் யூடியூப், பேஸ்புக், விமியோ போன்ற தளங்கள் உட்பட மேலும் 300 க்கும் மேற்பட்ட தளங்களில் இருக்கக்கூடிய வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:அது மாத்திரம் இன்றி வீடியோ கோப்புக்களில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொள்ளவும் பல வீடியோ கோப்புக்களை ஒன்றாக இணைத்து புதியதொரு வீடியோ கோப்பை உருவாக்கிக் கொள்ளவும் என வீடியோ எடிட்டிங் செய்வதற்கான வசதியும் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது.

இவற்றுடன் இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணினியில் இருக்ககூடிய புகைப்படங்களுக்கு அழகிய பின்னூட்ட இசைகளை வழங்கி Slideshow போன்றவற்றை தயாரித்துக் கொள்ளவும் அவற்றை AVI, MP4, MKV, FLV உட்பட மற்றும் ஏனைய வீடியோ வடிவங்களுக்கு மாற்றிக் கொள்ளவும் முடியும்.


இது போன்ற அருமையான பல வசதிகளை தரக்கூடிய இந்த மென்பொருளானது கிட்டத்தட்ட 3250 இந்திய ரூபாய்கள் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு மென்பொருளாகும்.

இருப்பினும் இதனை தற்பொழுது இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் (இந்த சலுகை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை மட்டுமே)
நீங்களும் இதனை இலவசமாக பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று Get Giveaway Version என்பதை சுட்டுக.

பின்னர் குறிப்பிட்ட மென்பொருளை தரவிறக்குவதற்கான இணைய இணைப்பும் அதற்கான Licence Code உம் தோன்றும்.


இந்த மென்பொருள் உங்கள் கணனியில் இயங்க உங்கள் விண்டோஸ் கணணி பின்வரும் அம்சங்களை அல்லது அதைவிட தரமான அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

Operation System:
Microsoft® Windows 98, NT, 2000, 2003, XP, Vista (32 & 64 bit), Windows 7 (32 & 64 bit), Windows 8 (32 & 64 bit)

Processor:
1GHz processor or above

RAM:
256MB RAM (512MB or above recommended)

Free Hard Disk:
100MB space for installation

Graphic Card:
256MB RAM (512MB or above recommended)தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top