இலவச அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் ஏனையவர்களுடன் இலவசமாக புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பரிமாற்றிக் கொள்வதற்குமாக வழங்கப்படக்கூடிய சேவைகளில் "வைபர்" எனும் சேவையும் ஒன்றாகும்.

வைபர் சேவை


ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களால் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படும் இந்த சேவையானது மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் ஏனையவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது.


அந்தவகையில் இதன் புதிய பதிப்பில் மிகவும் பனுள்ள ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அதாவது நீங்கள் ஒருவருக்கு அனுப்பக்கூடிய தகவல்களை நீக்கிக் கொள்வதற்கான வசதியே இதுவாகும். 

அதாவது குறிப்பிட்ட ஒருவருக்கு நீங்கள் அனுப்பிய தகவலை உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து மாத்திரம் இன்றி நீங்கள் குறிப்பிட்ட தகவலை யாருக்கு அனுப்பினீர்களோ அவரது ஸ்மார்ட் போனில் இருந்தும் நீக்க முடியும்.

வைபர் செயலி


குறிப்பிட்ட ஒருவருக்கு தவறான தகவல்கள் அனுப்பப்பட்டுவிடும் சந்தர்பத்திலோ அல்லது முக்கியமான தகவல்கள் தவறுதலாக இன்னுமொருவருக்கு அனுப்பப்பட்டுவிடும் போதோ இந்த வசதி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.


தொடர்புடைய இடுகை:மேற்குறிப்பிட்ட வசதியானது வைபர் சேவைக்கு ஈடாக பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப், ஸ்கைப், சோமா, டெலிகிராம் போன்ற எந்த ஒரு சேவையிலும் இது வரை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஆவணங்கள், Zip செய்யப்பட்ட கோப்புக்கள், Presentation ஆவணங்கள் போன்ற எந்த ஒரு கோப்புக்களையும் பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் இதன் புதிய பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் நண்பர்களுடன் தகவல்களை இலகுவாக பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் இதன் புதிய பதிப்பில் தரப்பட்டுள்ளது.மேலும் வைபர் மூலம் வரக்கூடிய செய்திகளுக்கு வைபர் செயலியை திறக்காமலே அதன் Notification மூலம் மறுமொழி அளிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. (ஐபோன்)


தரவிறக்குவதற்கான இணைப்புக்கள் பின்வருமாறு 
வைபர் தொடர்பான எமது முன்னைய பதிவை பார்க்க இங்கே சுட்டுக.

Love to hear what you think!

1 comments:

 
Top