குறிப்பிட்ட ஒருவர் தொலைபேசி மூலம் எம்முடன் தொடர்பு கொள்ளும் போது அழைப்பவருடைய இலக்கம் யாருடையது என்பதை அறிந்து கொள்வதற்கான வசதி ஆரம்பத்தில் வெளிவந்த தொலை தொடர்பு சாதனங்களில் இருக்கவில்லை.
எனினும் அதன் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல், மற்றும் ஏனைய தொலைதொடர்பு சாதனங்களில் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் ஏனையவர்களின் இலக்கங்களை குறிப்பிட்ட சாதனத்தில் சேமிப்பதற்கும் அவ்வாறு சேமிக்கப்பட்டுள்ள இலக்கங்களில் இருந்து அழைப்புக்கள் வரும் போது அழைப்பவரை அறிந்து கொள்ளவும் வசதி வழங்கப்பட்டது.


ஆனாலும் இது தகவல் தொழில்நுட்பம் பாரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காலம் அல்லவா?

இன்றோ தொழில்நுட்ப வரவுகள் அனைத்தும் பல அற்புதமான வசதிகளை தரக்கூடியவைகளாக அமைந்துள்ளன.

அந்தவகையில் எமது ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படாத இலக்கங்களில் இருந்து அழைப்புக்கள் வரும்போதும் கூட அழைப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது "ட்ரூ காலர்" எனும் ஸ்மார்ட் சாதனங்களுக்கான செயலி.


இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன் சாதனங்களில் மாத்திரம் அல்லாது மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன் மற்றும் நோக்கியா, பிளாக்பெர்ரி டைசன் ஆகிய மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  தரவிறக்குவதற்கான சுட்டி கீழே வழங்கப்பட்டுள்ளது.


இந்த செயலி எவ்வாறு செயற்படுகிறது?

இந்த செயலியை நிறுவும் போது நிறுவப்படும் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் அனைத்தும் ட்ரூ காலர் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகிறது.

Truecaller Download


இவ்வாறு "ட்ரூ காலர்" தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள இலக்கங்களில் இருந்து உங்களுக்கு அழைப்புக்கள் வரும் போது அவைகள் உங்கள் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்பட்டிருக்காவிட்டாலும் குறிப்பிட்ட இலக்கத்தில் இருந்து அழைப்பவர் யார் என்பதை "ட்ரூ காலர்" தரவுத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ள உதவுகிறது இந்த செயலி.

எனவே அழைப்புக்கள் வரும்போது அழைப்பவர் யார் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும் எனின் அழைப்புக்கள் வரும் போது இணையம் தொடர்புபடுத்தப்பட்ட நிலையில் இருப்பது அவசியம்.

அல்லது குறிப்பிட்ட இலக்கத்தை ட்ரூ காலர் செயலியில் உள்ளிடுவதன் மூலம் குறிப்பிட்ட இலக்கம் யாருடையது என்பதை அறிந்து கொள்ள முடியும்.இந்த செயலியை மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருவதால் ஏராளமானவர்களின் இலக்கங்களை யாருடையது என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். 

எனினும் அனைத்து இலக்கங்களையும் அடையாளம் காண முடியும் என்று கூறிவிட முடியாது. புதிய இலக்கங்கள் ட்ரூ காலர் தரவுத்தளத்தில் உள்வாங்கப்படாமல் இருப்பதை இதற்கு ஒரு காரணமாக குறிப்பிடலாம்.
மேலும் இந்த செயலி மூலம் தேவையற்ற, தொந்தரவு தரக்கூடிய இலக்கங்களில் இருந்து வரக்கூடிய அழைப்புக்களை தானாகவே இனங்கண்டு அவற்றை தவிர்த்துக் கொள்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த செயலில் தரப்பட்டுள்ள "கண்டறி" (Discover) எனும் பகுதி ஊடாக உங்கள் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படாத ஆனால் நீங்கள் பெரும்பாலும் அறிந்திருக்கக் கூடிய நபர்களின் பெயர்கள் பட்டியல் படுத்தப்படுகிறது. எனினும் அவர்களின் இலக்கங்களை நீங்கள் பார்க்க வேண்டும் எனின் பிரீமியம் எனும் கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய சேவையை பெற வேண்டும்.மேலும் தமிழ் மொழி உட்பட எந்த ஒரு மொழியிலும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ள முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


நீங்களும் இந்த செயலியை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது Tamilinfotech பேஸ்புக் பக்கத்தின்  ஊடாக இணைந்திருங்கள்.

Love to hear what you think!

1 comments:

 
Top