இன்று வாட்ஸ்அப், வைபர், ஸ்கைப் போன்ற மெசேஜிங் சேவைகள் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

டெலிகிராம் செயலி


எனவே இவ்வாறான சேவைகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதும் இந்த சேவைகளில் அடிக்கடி புதுப்புது வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதும் வழமையாகிவிட்டது.

அந்த வகையில் வாட்ஸ்அப் சேவையை போன்ற வசதிகளை தரக்கூடிய டெலிகிராம் சேவையிலும் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டெலிகிராம் நிறுவனத்தின் அண்மைய அறிக்கை படி அது மாதாந்தம் 100 மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


டெலிகிராம் மெசேன்ஜரின் புதிய மேம்படுத்தல்கள்

பதிப்பு v3.7(மார்ச்-2016) புதிய மேம்படுத்தல் 

இதன் அண்மைய மேம்படுத்தலின் படி டெலிகிராம் குழுவில் 5000 உறுப்பினர்கள் வரை இணைத்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் எல்லை முன்னைய பதிப்புகளில் 1000 வரை மாத்திரமே இருந்தது.

மேலும் இதிலுள்ள சூப்பர் குரூப் எனும் குழுவில் ஒரு செய்தியை அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் குறிப்பிட்ட செய்தியை குழுவின் மேற்படுதியில் இணைத்து (Pin) வைப்பதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.சூப்பர் குரூப் குழுவை பகிரங்க (Public) குழுவாக மாற்றுவதற்கு வசதி  வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் உள்ள எந்த ஒருவராலும் அந்த குழுவில் உள்ள பதிவுகளை பார்க்க முடியும்.

இவைகள் தவிர டெலிகிராம் குழு ஒன்றை நிர்வகிப்பவர்களுக்கு மேலும் பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.


பதிப்பு v3.3 (நவம்பர் -2015) முன்னைய மேம்படுத்தல்கள்

இதன் அண்மைய பதிப்பில் "குறிப்பிட்ட ஒரு குழுவை நிர்வகிப்பதற்காக பல நிர்வாகிகளை இணைத்துக்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது"

அத்துடன் ஒரு குழுவில் 1,000 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும், இந்த எண்ணிக்கை ஆரம்பத்தில் 200 ஆக வரையறுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் டெலிகிராம் சேவையில் வழங்கப்படக்கூடிய சேனல் (Channels) எனும் வசதியில் பகிரப்படும் செய்திகளை மிக விரைவாக ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக "Quick Share" எனும் Botton வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஐபோன் மூலம் டெலிகிராம் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு "Quick Reply" எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் டெலிகிராம் மூலம் வரக்கூடிய செய்திகளுக்கு Notification பகுதியில் இருந்தவாறே மறுமொழி அனுப்ப முடியும்.

மேற்குறிப்பிட்டவைகள் புதிய பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிகளாகும் டெலிகிராம் பற்றி எமது விரிவான பதிவை பார்க்க இங்கே சுட்டுக.


இதனை பின்வரும் இணைப்பு மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு ஐபோன் சாதனங்களுக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top