இன்று உலகில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் அதிகமான ஸ்மார்ட் போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன.

ஆண்ட்ராய்டு ஆபத்து


இதன் மூலம் ஏராளமான பயன்களை பெற முடிந்தாலும் கூட சில சந்தர்பங்களில் எம்மை எரிச்சலடைய செய்யக்கூடிய அல்லது பேராபத்தை தரக்கூடிய நிகழ்வுகளும் ஏற்படுவதுண்டு.அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு   "ஸ்டேஜ்ப்ரைட்" எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் பாதிக்கும் புதிய வைரஸ் நிரல் 

தற்பொழுது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு பரவி வரும் புதிய மூன்று வைரஸ் நிரல்களும் Lookout Security நிறுவனத்தால் இனங்காணப்பட்டுள்ளது.

Shuanet, Shedun மற்றும் ShiftyBug எனும் மூன்று நிரல்களே இவைகளாகும். இந்த நிரல்கள் உள்ளடக்கப்பட்ட பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், Candy Crush போன்ற செயலிகள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகள் Lookout நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றின் பாதிப்புக்கள் அமெரிக்கா, ஜேர்மனி, ஈரான், ரஷ்யா, இந்தியா, ஜமைக்கா, சூடான், பிரேசில், மெக்ஸிக்கோ, மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அதிகம் இனங்காணப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் நிரல் ஸ்மார்ட் போன்களுக்கு எவ்வாறு பரவுகின்றன?


மேற்குறிப்பிடப்பட்ட நிரல்களால் பாதிக்கப்பட்ட செயலிகளை நீங்கள் தரவிறக்கும் போது இவைகள் உங்கள் ஸ்மார்ட் போன்களில் வந்தமர்ந்து கொள்கின்றன. எனினும் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்கும் போது இவ்வாறன பாதிப்புக்கள் ஏற்படாது. (APK புவர் தளமும் பாதுகாப்பானதே)

எனினும் மூன்றாம் நபர் தளங்களில் இருந்து APK கோப்புக்களை தரவிறக்கும் போது இது போன்ற வைரஸ் நிரல்களால் பாதிப்படைந்த செயலிகள் உங்கள் ஸ்மார்ட் போன்களுக்கு வந்தடைகின்றன.


இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?


இவற்றின் பிரதான செயற்பாடு விளம்பரங்களை காட்சிப்படுத்துவதே ஆகும். எனவே பாதிக்கப்பட்ட உங்கள் மொபைல் சாதனத்தில் எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்கள் தோன்றும்.


இவற்றில் இருந்து மீளுவது எப்படி?


துரதிஷ்டவசமாக இவற்றை இலகுவில் நீக்கிக் கொள்ள முடியாது. காரணம் இவைகளால் உங்கள் ஸ்மார்ட் போன் பாதிக்கப்பட்ட உடன் உங்களை அறியாமலேயே உங்கள் ஸ்மார்ட் போன் "ரூட்" செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை Factory Reset செய்தாலும் கூட இவைகள் மீளுவும் இயங்கத் துவங்கி விடும். 

முன்னேற்பாடுகள் ஏதும் உண்டா?


வந்த பின் யேசிப்பதை விட வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே நீங்கள் செயலிகளை தரவிறக்கும் போது முடியுமானவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்குங்கள். நம்பகரமான தொழில்நுட்ப தளங்களால் பரிந்துரைக்கப்படாத அல்லது சந்தேகத்துக்கு இடமான APK கோப்புக்களை எவ்விதத்திலும் தரவிறக்கி நிறுவ வேண்டாம்.

மேலும் உங்கள் ஆண்ட்ராய்டு போனின் Settings ===> Security பகுதியில் Unknown Sources என்பதில் இருக்கும் Tick அடையாளத்தை நீக்கி விடுக.

Love to hear what you think!

1 comments:

 
Top