வாட்ஸ்அப் போன்ற சிறந்த வசதிகளை தரக்கூடிய சேவைகளுள் "சோமா" எனும் சேவையும் ஒன்றாகும்.

இலவச கால்


எனினும் வாட்ஸ்அப் பற்றி அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு இதனை அதிகமானவர்கள் அறிந்ததில்லை.

சோமா மெசேன்ஜர் வாட்ஸ்அப்பிற்கு எவ்வகையில் நிகரானது?

வாட்ஸ்அப் மூலம் நாம் பெறக்கூடிய அனைத்து வசதிகளையும் இந்த சேவையின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒருவருக்கு ஒருவர் புகைப்படங்களை பரிமாறிக் கொள்வது தொடக்கம் வீடியோ கோப்புக்கள், குரல் பதிவுகள் போன்றவற்றையும் இன்னும் ஒருவருக்கு அனுப்பவும் பெறவும் முடிகிறது.

அது மாத்திரம் அல்லாது வாட்ஸ்அப் சேவையில் போன்றே குரல் அழைப்புக்களையும், வீடியோ அழைப்புக்களையும் மேற்கொள்ளவும் முடியும்.

மேலும் குழு அரட்டையில் (Group Chatting) ஈடுபடுபவர்களுக்கு, ஒரு குழுவில் 500 உறுப்பினர்கள் வரை இணைத்துக்கொள்ள முடியும். வாட்ஸ்அப்பில் ஆகக்கூடுதலாக 100 உறுப்பினர்களை மாத்திரமே இணைத்துக்கொள்ள முடிகிறது.

பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானதா?

இதன் மூலம் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய தகவல்கள் "என்க்ரிப்ட்" செய்யப்பட்ட நிலையில் பகிரப்படுவதால் எந்த ஒரு மூன்றாம் தரப்பினராலும் எமது தகவல்களை திருட முடியாது. அத்துடன் நாம் பகிரக்கூடிய தகவல்கள் அனுப்பப்பட்டவருக்கு சென்றடைந்தவுடன் அந்த தகவல்கள் "சோமா மெசேன்ஜர்" தரவுத்தளத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டுவிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த அனைத்து சேவைகளையும் இலவசமாகவே பெற முடிகின்றமை இன்னும் இனிப்பான விடயம் அல்லவா? என்றாலும் நாம் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த வருடாந்தம் 1 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.


தொடர்புடைய இடுகை:


சோமா மெசேன்ஜரில்  குரூப் கால் வசதி அறிமுகம் (வீடியோ/வாய்ஸ்)


தற்பொழுது இதன் புதிய பதிப்பில் "குரூப் கால்" (Group Call) வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சோமா மெசேன்ஜர் ஆண்ட்ராய்டு


அதாவது இந்த வசதி மூலம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் அழைப்புக்களை மேற்கொள்ளும் முறையே இதுவாகும். இவ்வாறு நாம் மேற்கொள்ளும் குழு அழைப்புக்களை குரல் அடிப்படையில் மாத்திரம் அல்லாது ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசும் வகையில் வீடியோ அழைப்புக்கலாகவும் மேற்கொள்ள முடியும்.

இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்க.
குறிப்பு:
குரூப் கால் (Group Call) மேற்கொள்வதற்கு உங்கள் நண்பர்களும் இதன் புதிய பதிப்பை நிறுவி இருப்பது அவசியம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top