அன்று ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு சாதனங்கள்/கருவிகள் என பயன்படுத்தப்பட்ட நிலைமை இன்று முற்றாக மாறி அனைத்து தேவைகளையும் எமது கையில் இருக்கும் ஸ்மார்ட் சாதனம் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது.

ஸ்மார்ட் போன் அளவீட்டு செயலிஅந்த வகையில் குறிப்பிட்ட ஒரு பொருள் நில மட்டத்திற்கு சமாந்தரமாக அமைந்துள்ளதா? என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது Power Bubble எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.கட்டிட வேளைகளில் ஈடுபடுபவர்கள் அல்லது தளபாடங்களை வடிவமைப்பவர்கள் இதற்கென பிரத்தியோகமான கருவி ஒன்றை பயன்படுத்துவதை நீங்கள் அவதானித்து இருக்கக் கூடும்.

இந்த வசதியை ஸ்மார்ட் சாதனங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள உதவும் இந்த செயலியானது எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


ஸ்மார்ட்-போன்-அளவீட்டு-அப்ளிகேஷன்


உங்கள் ஸ்மார்ட் போனை நிலத்துக்கு செங்குத்தாகவோ, கிடையாகவோ அல்லது நிலத்துக்கு சமாந்தரமாகவோ வைப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பொருள் நிலத்துக்கு சமாந்தரமாக அமைந்துள்ளதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அவ்வாறு நீங்கள் அளவிடும் போது குறிப்பிட்ட செயலியின் வாசிப்பானது பூச்சியமாக அமையுமானால் அந்த பொருள் நிலத்துக்கு சமாந்தரமாக அமைத்துள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

அது மாத்திரம் இன்றி குறிப்பிட்ட ஒரு பொருள் எத்தனை பாகை கோணத்தில் சரிவாக அமைந்துள்ளது என்பதையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும்.

எனவே உங்கள் வீட்டின் தரை சரிவின்றி சரியான மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதா? புதிய தளபாடப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவைகள் சரியான மட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பன போன்ற பல்வேறு சந்தர்பங்களில் இந்த செயலி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த செயலியை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

2 comments:

 
Top