நோக்கியா 230 மொபைல்

நோக்கியா 230 எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

நோக்கியா மொபைல்


நோக்கியா 230 மற்றும் நோக்கியா 230 டூயல் ஆகிய இரு வேறு பதிப்புக்களாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா 230 டூயல் என்பதில் இரண்டு சிம் அட்டைகளை பயன்படுத்த முடியும்.



அலுமினியத்தினாலான வெளிப்புறத்தை கொண்டுள்ள இது  2.8 அங்குல QVGA திரையை கொண்டுள்ளது.

மேலும் மைக்ரோ எஸ்.டி கார்ட் ஐ பயன்படுத்தி 32 ஜிபி வரை இதன் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

செல்பி புகைப்படங்களுக்காக ஃப்ளாஷ் வசதியுடன் கூடிய  2 மெகபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட முன் பக்க கேமரா தரப்பட்டுள்ளதுடன், ஃப்ளாஷ் வசதியுடன் கூடிய  2 மெகபிக்சல் பிரதான கேமராவும் இதில் தரப்பட்டுள்ளது.


கிட்டத்தட்ட 3700 இந்திய ரூபாய்களாக விலை குறிக்கப்பட்டுள்ள இது எதிர்வரும் மாதம் இந்தியா உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் விற்பனைக்கு வர உள்ளது.


இதன் வீடியோ இணைப்பு பின்வருமாறு


Love to hear what you think!

2 comments:

 
Top