மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் 4G

4ஜி வசதியுடன்கூடிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் 4G Q413 எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் ஸ்மார்ட் போன்
சிறந்த வசதிகளுடன் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களுள் இதுவும் ஒன்றாகும்.இது 5 அங்குல HD 720p IPS திரையுடன் 2GB RAM மற்றும் 1GHz வேகத்தில் இயங்கக்கூடிய மீடியாடெக் Mt6735P எனும் வகையில் அமைந்த ப்ராசசர் போன்றவற்றை கொண்டுள்ளது.

அத்துடன்  16 GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD Card ஐ பயன்படுத்தி 32 GB வரை அதிகரித்துக் கொள்ளலாம்.


மேலும்  மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் 4G எனும் இந்த ஸ்மார்ட் போனில் LED flash வசதியுடன் கூடிய 8 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமரா தரப்பட்டுள்ளதுடன் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் செல்பி புகைப்படங்களை எடுப்பதற்காகவும் 2 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட முன்பக்க கேமரா தரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் 

இது ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அதேநேரம் 4G வலையமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


இவைகள் தவிர டுவல் சிம் வசதியும் தரப்பட்டுள்ள இதனை  பிளிப்கார்ட் (Flipkart) தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யலாம், இதன் விலை 6,599 இந்திய ரூபாய்களாக குறிக்கப்பட்டுள்ளது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top