11,999 இந்திய ரூபாய்களுக்கு மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.


இது மலிவு விலையில் கிடைப்பது மாத்திரம் அல்லாமல் சிறந்த வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 ஸ்மார்ட் போனானது 1920 x 1080 Pixel Resolution இல் அமைந்த 5.2 அங்குல Full HD IPS திரையை கொண்டுள்ளதுடன்  3GB RAM ஐயும் கொண்டுள்ளது.

மேலும் 1.3GHz வேகத்தில் இயங்கக்கூடிய Octa-core 64-bit MediaTek ப்ரோசசரை கொண்டுள்ள இது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இருப்பினும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ பதிப்பை அடுத்த வருடம் வெளியிடவுள்ளதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது 16GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ளது, நினைவகத்தை மேலும் அதிகர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு microSD Card ஐ பயன்படுத்தி 64GB வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும். 

அத்துடன் LED flash வசதியுடன் கூடிய 13 மெகா பிக்சல் தெளிவுத்திறனில் அமைந்த பிரதான (Back) கேமராவை இது கொண்டுள்ள அதேவேளை  LED flash வசதியுடன் கூடிய 5 மெகா பிக்சல் தெளிவுத்திறனில் அமைந்த முன்பக்க (Front) கேமராவையும் இது கொண்டுள்ளது.


இவைகள் தவிர 2900 mAh வலுவை கொண்ட பேட்டரி மற்றும் 4G வலையமைப்புகளுக்கான ஆதரவு போன்றவற்றை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனானது, குறைந்த விலையில் சிறந்த வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போன்களை எதிர்பார்பவர்களுக்கு சரியான தெரிவாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புடைய இடுகை:


 Sources: gsmarena

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top