லெனோவா வைப் எஸ் 1 எனும் ஸ்மார்ட் போனை இந்தியாவில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்

லெனோவா வைப் எஸ் 1


இது 1.7GHz வேகத்தில் இயங்கக்கூடிய ஒக்டா கோர் மீடியாடெக் MT6752 ப்ராசசர் மற்றும் 3GB RAM போன்றவற்றை தன்னகமாக கொண்டுள்ளது.32 ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதில் 128 ஜிபி  microSD Card ஐ பயன்படுத்திக் கொள்ளும்  வசதி தரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது 4ஜி வலையமைப்புகளுக்கும் ஆதரவளிக்கக் கூடியதாகும்.

மேலும் இதில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா தரப்பட்டுள்ளதுடன் 8 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய முன்பக்க கேமராவும் தரப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்தாற் போல் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவையும் இது கொண்டுள்ளது.

இரண்டு முன்பக்க கேமராவை கொண்ட லெனோவாவின் முதலாவது ஸ்மார்ட் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அத்துடன் 5 அங்குல திரையை கொண்டுள்ள இது 143.3 மில்லிமீட்டர் நீளம் 70.8 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 7.8 மில்லிமீட்டர் தடிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவைகள் தவிர இதில் இரண்டு சிம் அட்டைகளை பயன்படுத்துவதற்கான வசதி மற்றும் Wi-Fi, Bluetooth v4.0, FM radio, GPS போன்றவற்றுக்கான வசதிகளும் தரப்பட்டுள்ளது.

இதனை Amazon தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யலாம் இதன் விலை 15,999 இந்திய ரூபாய்களாக குறிக்கப்பட்டுள்ளது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top