சிறந்த வசதிகளுடன் குறைந்த விலையில் Huawei Honor 5X எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது Huawei நிறுவனம்.


ஹோனர் ஸ்மார்ட் போன்


மிக விரைவாக செயற்படும் Fingerprint Sensor வசதியை கொண்டுள்ள இது 2GB RAM மற்றும் 3GB RAM ஆகிய இருவேறு பதிப்புக்களை கொண்டுள்ளது.


5.5 அங்குல Full HD IPS திரையை கொண்டுள்ள இது 64-bit octa-core Qualcomm Snapdragon 616 ப்ராசசரை கொண்டுள்ளது.

மேலும் 16 GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை 128 GB வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும்.

அத்துடன் Dual-LED flash வசதியுடன் கூடிய 13 மெகா பிக்சல் தெளிவுத்திறனில் அமைந்த பிரதான கேமராவையும் 5 மெகா பிக்சல் பக்க  தெளிவுத்திறனில் அமைந்த முன்பக்க கேமராவையும் இது கொண்டுள்ளது.

மேலும் இது குறைந்த தடிப்பிலும் சுற்றுப்புறம் உலோகத்தை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் இயங்குவதற்கு ஏற்ற வகையில் 3000 mAH  வலுவை கொண்ட பேட்டரியை இது தன்னகமாக கொண்டுள்ளது. அத்துடன் வேகமாக மின்னேற்றி கொள்ளும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனை வெறும் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்ள முடியும்.


இதன் 2 GB பதிப்பு 999 யுவான்கள் ஆகவும் 3 GB பதிப்பு 1,399 யுவான்கள் ஆகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது. இது முறையே 10,200 மற்றும் 14,300 இந்திய ரூபாய்கள் ஆகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top