கூகுள் தரக்கூடிய சேவைகளுள் கூகுள் மேப்ஸ் என அழைக்கப்படும் கூகுளின் வரைபட சேவையும் மிகவும் பயனுள்ள ஒரு சேவையாகும்.

கூகுள் நேரடி போக்குவரத்து கண்காணிப்பு


இதனை கூகுள் மேப்ஸ் எனும் இணையதளத்திற்கு செல்வதன் ஊடாக நேரடியாக கணினிகளில் பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் ஏனைய ஸ்மார்ட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான செயலிகளும் தரப்பட்டுள்ளன.


இதன் மூலம் உலகில் இருக்கக்கூடிய எந்த ஒரு இடத்தையும் தெட்டத்தெளிவாக பார்த்துக்கொள்ள முடிவது மட்டுமின்றி இன்னும் பல பயனுள்ள வசதிகளையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில் இதில் தரப்பட்டிருக்கும் Live Traffic எனப்படும் "நேரடியாக போக்குவரத்தை கண்காணிக்கும்" வசதி மூலம் போக்குவரத்து நெரிசல் தொடர்பான நேரடித் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

இந்த வசதியானது ஆரம்பத்தில் அமெரிக்க, ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலேயே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது பின் படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. 


தொடர்புடைய இடுகை:

தற்பொழுது இந்த வசதியை இலங்கையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதனை உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் பயன்படுத்த விரும்பினால் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் மேப்ஸ் செயலியின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளில் அமைந்துள்ள மெனு (Menu) Botton ஐ சுட்டுக 
பின்னர் தோன்றும் சாளரத்தில் Traffic எனும் உப பகுதியை தெரிவு செய்க.

இனி போக்குவரத்து நெரிசலை நேரடியாக கண்காணிப்பதற்கான பகுதி தோன்றும். 

இனி நீங்கள் நேரடி போக்குவரத்து நெரிசலை அறிய வேண்டிய பிரதேசத்தை Zoom செய்வதன் மூலம் குறிப்பிட்ட பிரதேசத்தில் இடம்பெறும் போக்குவரத்து நெரிசலை நேரடியாக அறிந்து கொள்ளலாம்.

கணினியில் பயன்படுத்துபவர்களுக்கும் இதே முறை தான். கூகுள் மேப்ஸ் தளத்துக்கு செல்ல இங்கே சுட்டுக.


"Live Traffic" பகுதி மூலம் உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளானது பிரதானமாக நான்கு வர்ணங்களில் அமைந்த கோடுகளை கொண்டிருக்கும். அவைகளின் விளக்கங்கள் பின்வருமாறு.

  • பச்சை நிற கோடுகள் - போக்குவரத்து நெரிசல் இல்லை 
  • மஞ்சள் நிற கோடுகள் - ஓரளவு போக்குவரத்து நெரிசல் உண்டு 
  • சிவப்பு நிற கோடுகள் - அதிக போக்கு வரத்து நெரிசல்கள் உள்ளது.நீங்கள் மேற்கொள்ள இருக்கும் பிரயாணம் தொடர்பில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் மாற்று வழிகளை பயன்படுத்தி உங்கள் பிரயாணங்களை தாமதம் இன்றி மேற்கொள்வதற்கும் இந்த வசதி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதி ஐயமில்லை.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top