ஜியோனி எஸ்6 எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது ஜியோனி நிறுவனம்.

ஜியோனி ஸ்மார்ட் போன்


குறைந்த தடிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இது ஒரு  நடுத்தர ஸ்மார்ட் போன்களுக்கான வசதிகளை கொண்டுள்ளது.


5.5 அங்குல AMOLED திரையை கொண்டுள்ள இது 1.3GHz வேகத்தில் இயங்கக்கூடிய மீடியாடெக் MT6753 அக்டா அக்டா கோர் ப்ராசசரை கொண்டுள்ளது.

மேலும் இது 3 GB RAM ஐ கொண்டுள்ளதுடன் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

32 GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதில் microSD Card ஐ பயன்படுத்தி நினைவகத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.


செல்பி புகைப்படங்களை பிடிப்பதற்கும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்குமான 5 மெகா பிக்சல் தெளிவுத் திறனில் அமைந்த முன்பக்க கேமராவை கொண்டுள்ள இது 13 மெகா பிக்சல் பிரதான கேமராவையும் தன்னகமாக கொண்டுள்ளது.

அத்துடன் 4G LTE வலயமைப்புகளுக்கும் ஆதரவளிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட் போனானது USB Type-C எனும் வகையில் அமைந்த கனெக்டரை  கொண்டுள்ளது.

இவைகள் தவிர உலோகத்திலான சுற்றுப்புறத்தை கொண்டுள்ள இதன் தடிப்பு 6.9 மில்லிமீட்டர்கள் ஆகும்.

இதன் விலை 1699 யுவான்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 17500 இந்திய ரூபாய்கள் ஆகும். 


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top