தமது ஸ்மார்ட் போன்களில் இருக்கக்கூடிய பேட்டரி மிக விரைவில் தீர்ந்துவிடுவது இன்று பலருக்கும் பிரச்சினையாக அமைந்துள்ளது.

ஆண்ட்ராய்டு பேட்டரி நீண்ட நேரம் நிலைத்திருக்க


இவ்வாறு விரைவில் தீர்ந்து விடக்கூடிய பேட்டரியின் சக்தியை சேமிப்பதற்காக பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர்.அந்த வகையில் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரி அதிக நேரம் நீடித்து உழைப்பதற்காக ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ பதிப்பில் டோஸ் (Doze) எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வசதியானது எமது ஸ்மார்ட் போனை நாம் பயன்படுத்தாத சந்தர்பத்தில் எமது ஸ்மார்ட் போனில் உள்ள செயலிகள் இணையத்தோடு தொடர்புபடுவதை தடை செய்யும் முறையாகும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் பேட்டரி சக்தியை சேமிக்கும் டோஸ் (Doze) செயலி


எனவே ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ பதிப்பில் வழங்கப்பட்டுள்ள இந்த வசதியை ஏனைய பதிப்புக்களிலும் பயன்படுத்திக் கொள்வதற்காக டோஸ் (Doze) எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் உட்பட அதற்குப்பின் அறிமுகப்படுத்தப்பட்ட எந்த ஒரு பதிப்பிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவியபின் செயற்படுத்திவிட்டால் போதும், பின்னர் உங்கள் ஸ்மார்ட் போனின் திரை முடக்கப்படும் (Screen Off) ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இணையத்துடன் செயலிகள் தானாக தொடர்புபடுவதை இந்த செயலி தடை செய்யும்.

எனவே இணையத்துடன் தொடர்புபடுவதன் ஊடாக பின்புலத்தில் தானாக இயங்கத்துவங்கும் செயலிகளின் செயற்பாடு தடைசெய்யப்படுவதால் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் சக்தி அதிக நேரத்திற்கு நீடித்திருக்கும்.
மேலும் சில செயலிகள் தொடர்ச்சியாக இணையத்துடன் தொடர்புபட்டிருப்பதுதான் சிறந்தது என நீங்கள் கருதினால் அவ்வாறன செயலிகளை வைட் லிஸ்ட் (White List) எனும் பகுதியில் இணைப்பதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. 

இவ்வாறு வைட் லிஸ்ட் பகுதியில் இணைக்கப்படும் செயலிகலானது  டோஸ் (Doze) செயற்பட்டுக் கொண்டிருக்கும் போதும் தடையின்றி இணையத்துடன் தொடர்புபட அனுமதிக்கப்படும்.

ஆண்ட்ராய்டு செயலிகளை வைட் லிஸ்டில் இணைப்பது எவ்வாறு?


டோஸ் (Doze) செயலியின் இடது மேல் மொழியில் தரப்பட்டுள்ள செட்டிங்ஸ் குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்களுத் தேவையான செயலிகளை வைட் லிஸ்டில் இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த டோஸ் (Doze) செயலி எவ்வாறான சந்தர்பங்களில் செயற்பட வேண்டும் என்பதையும் இந்த செயலியின் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள செட்டிங்ஸ் பகுதியின் ஊடாக தீர்மானித்துக்கொள்ளலாம்.
குறிப்பு:

 இந்த செயலி செயற்படுவதற்கு இந்த செயலியால் உருவாக்கப்படும் "வர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்" என்பதை நீங்கள் அனுமதிக்க வேண்டும். (மேலே படத்தில் உள்ளவாறு)


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top