இன்றைய உலகில் நாம் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் ஏற்படக்கூடிய வளர்ச்சியின் காரணமாக குறிப்பிட்ட துறையில் புதுப்புது சொற்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

விரிவான கருத்து அறிய உதவும் இணையதளம்


நாம் அறிவியல் தொழில்நுட்பத் துறையை எடுத்துக்கொண்டால் புதுப்புது சொற்களின் தோற்றம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன.அவ்வாறான சொற்களில் ஏராளமானவைகள் குறுகிய உச்சரிப்பை கொண்டிருக்கும் அதே வேலை விரிவான ஒரு கருத்தை தரக்கூடியவைகளாக அமைக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு RAM, SSD, CPU, UPS, VIP, LOL போன்ற சொற்களை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். எனினும் இதன் விரிவான கருத்தை நம்மில் அதிகமானவர்கள் அறிந்ததில்லை.


abbreviations இணையதளம்


அதாவது RAM என்ற பதத்தின் விரிவான கருத்து Random Access Memory என அமைகிறது. எனவே மேலே குறிப்பிடப்பட்டது போன்ற குறுகிய சொற்களானது அதன் விரிவான சொற்களின் முதல் ஆங்கில எழுத்துக்களை கொண்டு அமைகிறது.

 Abbreviations இணையதளம்


விடயம் என்னவெனில் அவ்வாறு ஆங்கில முதல் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்படும் குறுகிய சொற்களுக்கான விரிவான கருத்தை அறிந்து கொள்ள உதவுகிறது Abbreviations எனும் இணையதளம்.

உங்களால் பொருள் அறிய முடியாத ஆங்கில முதல் எழுத்துக்களை கொண்டு அமையப் பெற்றுள்ள சொற்களை இந்த தளத்தில் உள்ளிடுவதன் மூலம் அவற்றின் விரிவான கருத்தை அறிந்து கொள்ள முடியும்.


நீங்கள் உள்ளிடக்கூடிய ஒரு சொல்லுக்கு பொருத்தமான அத்தனை விரிவான கருத்துக்களையும் இந்த தளம் பட்டியல் படுத்துகின்றது.


மேலும் அவற்றில் மிகவும் பொருத்தமான சொல்லை சரியாக இனங்கண்டு கொள்வதற்காக அவற்றுக்கு நட்சத்திர மதிப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதிக நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ள சொல்லை மிகவும் பொருத்தமான சொல்லாக இனங்கண்டு கொள்ளலாம்.


எனவே குறிப்பிட்ட ஒரு சொல்லின் விரிவான கருத்தை அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படும் போது இந்த தளம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top