எமது ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் நாம் பிடிக்கும் எமது புகைப்படங்களை மேலும் மெருகூட்டிக் கொள்ள உதவுகின்றது PIP Camera எனும் Android, iOS சாதனங்களுக்கான செயலி.


PIP Camera செயலி

இதன் மூலம் நீங்கள் ஏற்கனவே பிடித்த புகைப்படம் ஒன்றையோ, அல்லது இந்த செயலியில் தரப்பட்டுள்ள கேமரா மூலம் நேராடியாக உங்கள் புகைப்படம் ஒன்றை பிடிப்பதன் மூலமோ குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தை அழகிய தோற்றத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


எந்த ஒருவராலும் மிகவும் இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை கீழுள்ள இணைப்பு மூலம் இலவசமாகவே உங்கள் ஸ்மார்ட் சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.

PIP Camera


இந்த செயலியில் தரப்பட்டுள்ள Classic என்பதை சுட்டும் போது தோன்றும் கேமரா குறியீட்டை சுட்டுவதன் ஊடாக நேரடியாகவே புகைப்படங்களை எடுத்து அவற்றினை நீர் குவளையில் இருப்பது போன்றும், இதயத்தினுள் இருப்பது போன்றும், நீர் துளியில் இருப்பது போன்றும் என பல்வேறு விளைவுகளை உங்கள் புகைப்படங்களுக்கு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

அதே போல் Classic என்பதை சுட்டும் போது தோன்றும் புகைப்பட குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் Android, iOS சாதனத்தில் இருக்கக் கூடிய எந்த ஒரு புகைப்படத்துக்கும் மேற்குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:

அதே போல் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Magazine என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் புகைப்படங்கள் சஞ்சிகைகளின் அட்டை படமாக வந்திருப்பது போன்ற தோற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த பகுதியில் உங்கள் புகைப்படங்களை மெருகூட்டிக் கொள்ள என அருமையான பல தோற்றங்கள் தரப்பட்டுள்ளது.


PIP Camera

இந்த செயலியில் தரப்பட்டுள்ள Collage Maker மூலமாக உங்கள் உறவினர்கள் நண்பர்களின் பல புகைப்படங்களை அழகிய கோணங்களில் ஒரே புகைப்படமாக இணைத்துக் கொள்வதற்கும் அவற்றுக்கு அழகிய வர்ணங்களை, அல்லது படங்களை பின்புலத்தில் இட்டுக்கொள்ளவும் இதில் வசதி தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர Pro Edit எனும் பகுதி மூலம் உங்களது புகைப்படங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி அவற்றுக்கு வெவ்வேறு வர்ணங்களில் அமைந்த விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், மொசைக் விளைவை ஏற்படுத்தவும், நீங்கள் விரும்பும் வாசங்களை அழகிய எழுத்துருக்களில் அமைத்துக் கொள்ளவும் முடியும்.

இறுதியாக, நீங்கள் இந்த செயலியின் மூலம் மெருகூட்டிய உங்கள் புகைப்படத்தை பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதற்கும் வசதி தரப்பட்டுள்ளது.

இன்னும் பல வசதிகளை தரக்கூடிய இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top