கடந்த ஜூன் மாதம் 3GB RAM வசதியுடன் கூடிய ஒப்போ R7 எனும் ஸ்மார்ட் போனை ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.


ஒப்போ R7 ஸ்மார்ட்

இதனை தொடர்ந்து  ஒப்போ R7s எனும் தனது புதிய திறன் பேசியை (Smart Phone) அறிமுகப்படுத்துகிறது ஒப்போ நிறுவனம்.


அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  ஒப்போ R7s  எனும் இந்த புதிய ஸ்மார்ட் போனானது இது 4 GB RAM வசதியை கொண்டிருப்பதுடன் 8 மெகா பிக்சல் தெளிவுத் திறனில் அமைந்த முன் பக்க கேமராவை கொண்டுள்ளது.

அத்துடன்  Android 5.1.1. Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட  ColorOS 2.1 எனும் இயங்குதளத்தை இது கொண்டு இயங்குகிறது.

மேலும் 5.5 அங்குல AMOLED திரையை இது கொண்டுள்ளதுடன் 13 மெகா பிக்சல் பிரதான கேமரா 32 GB உள்ளக நினைவகம் போன்றவற்றையும் இது கொண்டுள்ளது. நினைவகத்தை மேலும் அதிகரிக்க விரும்புபவர்கள் microSD Card ஐ பகன்படுத்தி மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.


இவைகள் தவிர ப்ளூடூத், வை-பை, மற்றும் 4G வலையமைப்புகளுக்கான ஆதரவு போன்றவற்றை கொண்டுள்ள இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Sources: Oppo

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top