ஒன் பிளஸ் ஒன் நிறுவனம் "ஒன் பிளஸ் எக்ஸ்" எனும் ஸ்மார்ட் போனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒன் பிளஸ் ஒன் ஸ்மார்ட் போன்


இவ்வருடம் ஒன் பிளஸ் 2 எனும் ஸ்மார்ட் போனை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் இவ்வருடம் குறிப்பிட்ட நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது ஸ்மார்ட் போன் இதுவாகும்.1920 x 1080 Resolution இல் அமைந்த 5 அங்குல திரையை கொண்டுள்ள இது 3GB RAM மற்றும் 16GB உள்ளக நினைவகம் போன்றவற்றை கொண்டுள்ளது. நினைவகத்தை மேலும் அதிகரிக்க விரும்புபவர்கள் microSD Card ஐ பயன்படுத்தி அதிகரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட OxygenOS எனும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது Qualcomm Snapdragon 801 ப்ராசசரை தன்னகமாக கொண்டுள்ளது.

இதன் முன்பக்க கேமரா 8 மெகா பிக்சல் தெளிவுத்திறனை கொண்டுள்ள அதேவேளை 13 மெகா பிக்சல் தெளிவுத்திறனுடைய பிரதான கேமராவையும் இது கொண்டுள்ளது.


இது Onyx மற்றும் Ceramic ஆகிய இரு வேறு பதிப்பக்களை கொண்டுள்ளது. இதில் Onyx எனும் பதிப்பானது 16,999 இந்திய ரூபாய்களாக விலை குறிக்கப்பட்டுள்ளதுடன் Ceramic எனும் பதிப்பானது 22,999 ரூபாய்களாக விலை குறிக்கப்பட்டுள்ளது. 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top