HI






வேகமாக இயங்கும் இன்றைய உலகில் நாம் செய்வதற்கு நினைத்த ஏராளமான விடயங்களை அடிக்கடி மறந்து விடுகிறோம் அல்லவா?


Minimal Android செயலி


சில சந்தர்பங்களில் ஏற்படும் ஒரு சிறிய மறதி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் சந்தர்பங்களும் உண்டு.

எனவே நாம் செய்ய வேண்டிய கருமங்களை அடிக்கடி ஞாபகப் படுத்தி அவற்றை தவறாமல் செய்து கொள்ள ஸ்மார்ட் சாதனங்களுக்கான செயலிகள் உதவுகின்றன.

இதற்கென ஏராளமான செயலிகள் இருந்தாலும் Minimal எனும் Android சாதனத்துக்கான செயலி பயன்படுத்துவதற்கு இலகுவாக உள்ளதுடன் எளிமையான இடைமுகத்தையும் கொண்டுள்ளது. இந்த செயலியை தரவிறக்குவதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.


இந்த செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள கூட்டல் "+" குறியீட்டைசுட்டுவதன் மூலம் இந்த செயலியில் உங்களுக்குத் தேவையான குறிப்புக்களை உள்ளிட்டுக் கொள்ள முடியும்.

Minimal Android அப்ளிகேஷன்

பின் அவைகளை நீங்கள் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் எனின் நீங்கள் குறிப்புக்களை உள்ளிடும் போது தோன்றும் Remind Me என்பதை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் ஞாபகப்படுத்த வேண்டிய நாள் மற்றும் நேரம் போன்றவற்றினை இதில் உள்ளிட்டுக் கொள்ளலாம்.

பின் அவைகள் நீங்கள் தெரிவு செய்த நாள் மற்றும் நேரத்தில் உங்களுக்கு Notification பகுதி மூலம் ஞாபகப்படுத்தப்படும்.

 

Minimal Night mode

மேலும் இந்த செயலியின் அமைப்புக்களுக்கான (Settings) பகுதி மூலம் அதன் தோற்றத்தை Night Mode எனும் தோற்றத்திற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும்.

எளிமையான தோற்றத்தை கொண்டுள்ள இந்த செயலியை என்தய ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.



தொடர்புடைய இடுகை: 


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top