மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன்  மைக்ரோசாப்ட் லூமியா 950 எனும் ஸ்மார்ட் போனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

 

மைக்ரோசாப்ட் Lumia 950 எனும் ஸ்மார்ட் போன்


2560 x 1440 Pixel resolution உடைய 5.2 அங்குல QHD  AMOLED திரையை கொண்டுள்ள இது மைக்ரோசொப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.


மேலும் Snapdragon 808 processor ஐ கொண்டுள்ள இதன் RAM நினைவகமானது 3 GB ஆகும்.

இதன் உள்ளக நினைவகமானது 32 GB ஆகும். நினைவகத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்கள் microSD Card ஐ பயன்படுத்தி 200 GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

அத்துடன் 4K வீடியோ கோப்புக்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வகையிலான 20 மெகா பிக்சல் PureView பிரதான கேமரா இதில் தரப்பட்டுள்ளதுடன் 5 மெகா பிக்சல் தெளிவுத்திறன் உடைய முன்பக்க கேமராவும் தரப்பட்டுள்ளது.

மேலும் இதில் FM Radio, 4G LTE வசதி, Wireless charging,  WiFi, Bluetooth 4.1 போன்ற வசதிகளும் தரப்பட்ட்ள்ளன.

இதில் தரப்பட்டுள்ள Type-C எனும் USB Port ஆனது மிகவேகமாக மின்னேற்றிக் கொள்வதற்கும் வேகமாக தரவுகளை பரிமாற்றிக் கொள்வதற்கும் துணைபுரியக் கூடியதாகும்.


வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்து கொள்ளும் வகையில் Dual SIM மற்றும் Single SIM ஆகிய இருவேறு பதிப்புக்களை இது கொண்டுள்ளது.

இதன் விலை 549 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது.

Sources: fonearena

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top