கோடிக் கணக்கான இணைய தளங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இன்றைய இணைய உலகில் எந்த ஒரு இணைய தளத்தினதும் முன்னைய தோற்றத்தை அறிந்து கொள்ள உதவுகிறது "டைம் ட்ரவல்" (Time Travel) எனும் இணையதளம்.


டைம் ட்ரவல் இணையதளம்


கூகுள், பேஸ்புக், ட்விட்டர், யாஹூ, உட்பட எந்த ஒரு இணையதளமும் குறிப்பிட்ட ஒரு ஆண்டில், குறிப்பிட்ட ஒரு நாளில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில் எவ்வாறான தோற்றத்தை கொண்டிருந்தது என்பதை இந்த தளம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.எந்த ஒருவராலும் இந்த தளத்தை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையான தோற்றத்தில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் குறிப்பிட்ட ஒரு இணையதளத்தின் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை நீங்களும் அறிந்து கொள்ள விருபினால், கீழுள்ள இணைப்பின் மூலம் குறிப்பிட்ட தளத்துக்குச் செல்க.


  • இனி குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள முதலாவது கட்டத்தில் நீங்கள் முன்னைய தோற்றத்தை பார்க்க விரும்பும் இணையதளத்தின் முகவரியை உள்ளிடுக.

  • பின்னர் கீழே தரப்பட்டுள்ள கட்டங்களில் நீங்கள் அதன் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை அறிய விரும்பும் திகதி மற்றும் நேரத்தை உள்ளிட்டு "Find" என்பதை அலுத்துக.

  • பின் நீங்கள் உள்ளிட்ட திகதிதியில் அல்லது அதற்கு முன் அல்லது பின் குறிப்பிட்ட தளம் சேமிக்கப்பட்ட இணைப்பு கிடைக்கும்.


இனி அதனை சுடுவதன் மூலம் நீங்கள் உள்ளிட்ட திகதியில் குறிப்பிட்ட தளத்தின் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.


"டைம் ட்ரவல்" (Time Travel) இணையதளத்தின் படி.......

தமிழ்இன்போடெக் இணையதளம் 2013-12-11 அன்று இருந்த படியான தோற்றம்  

டைம் ட்ரவல் தளம்


தமிழ்இன்போடெக் தளத்தின் தற்போதைய தோற்றம்.

தமிழ்இன்போடெக் இணையதளம் கணினி

இது போன்று எந்த ஒரு இணைய தளத்தினதும் முன்னைய தோற்றங்களை நீங்களும் அறிந்து கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top