HI






LG நிறுவனமானது அருமையான பல வசதிகளுடன் தனது LG V10 எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகின்றது.

LG ஸ்மார்ட் போன்


செல்பி விரும்பிகளுக்கு சிறந்த தெரிவாக அமையும் வகையில் இந்த ஸ்மார்ட் போனில் இரண்டு முன்பக்க கேமரா தரப்பட்டுள்ளன. 5 மெகா பிக்சல் தெளிவுத் திறனில் அமைந்துள்ள இதன் மூலம்  80 டிகிரி கோணத்திலும் 120 டிகிரி கோணத்திலும் செல்பி புகைப்படங்களை எடுக்க முடியும்.


மேலும் இதன் பிரதான திரையுடன் மேலதிகமாக சிறியதொரு திரையும் இதன் மேற்பகுதியில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் செயலிகளை திறந்து கொள்ளவும், குறிப்புகளை கண்காணிக்கவும், Notification களை நிர்வகிக்கவும் என பல வசதிகளை பெற முடிகிறது.

மேலதிக திரை ஸ்மார்ட் போன்


மேலும் இதன் பிரதான கேமரா மூலம் 4K தெளிவுத்திறனில் அமைந்த வீடியோ கோப்புக்களை பதிவு செய்ய முடிவதுடன் Shutter speed, Frame rate, ISO, Focus, White balance போன்றவற்றை பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ள முடியும். (Manual) இவ்வாறான வசதிகளை தரக்கூடிய இதன் பிரதான கேமராவானது 16 மெகா பிக்சல் தெளிவுத்திறனை கொண்டுள்ளது.

இவைகள் தவிர இதன் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு.


  • 5.7 அங்குல QHD IPS LCD திரை.
  • 2.1 அங்குல இரண்டாம் திரை.
  • Android 5.1 Lollipop இயங்குதளம்.
  • Qualcomm Snapdragon 808 Processor.
  • 4GB RAM.
  • 64 GB உள்ளக நினைவகம். (microSD மூலம் 1 டெரா பைட் வரை நினைவகத்தை அதிகரிக்கலாம்.)
  • 3000 mAH Battery.
  • 4G LTE, Wi-Fi, Bluetooth 4.1, NFC போன்ற வசதிகள்.


இதன் விலை தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top