இன்று அதிகமானவர்களால் Android ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதில் பயன்படுத்தப்படும் கூகுள் கணக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

ஜிமெயில் கணக்கு


இதன் விளைவாக இன்று அதிகமானவர்களால் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே நாம் எமது தனிப்பட்ட மற்றும் வணிக ரீதியான தகவல்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஏனைய தகவல்களை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் என கூகுளின் ஜிமெயில் சேவையையே பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் எமது ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டால் அல்லது எமது ஸ்மார்ட் போன் வேறு வழிகளில் ஏனையவர்களின் கைக்கு கிடைத்து விட்டால் அவர்கள் எமது ஜிமெயில் கணக்கில் உள்ள விலைமதிப்பற்ற தகவல்களை பார்க்கவும் அதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புக்கள் உண்டு.


எனவே இது போன்ற பிரச்சினைகளுக்கு இன்னும் ஒரு ஸ்மார்ட் போனை அல்லது கணினியை பயன்படுத்தி தீர்வை பெற முடியும்.


தொடர்புடைய இடுகை: 

1. இவ்வாறன நிலைமைகள் உங்களுக்கு ஏற்பட்டால் உங்கள் ஸ்மார்ட் போனில் அல்லது கணினியில் உள்ள இணைய உலாவியை பயன்படுத்தி https://security.google.com/settings/security/activity எனும் பக்கத்திற்கு செல்க.2. பின்னர் தோன்றும் இணையப் பக்கத்தில் உங்கள் கூகுள் கணக்கின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்க.


3. இனி, நீங்கள் அண்மையில் கூகுள் கணக்கை திறப்பதற்காக பயன்படுத்திய அனைத்து சாதனங்களும் குறிப்பிட்ட பக்கத்தில் பட்டியல் படுத்தப்படும்.4. பின், தொலைந்துபோன உங்கள் ஸ்மார்ட் போனை தெரிவு செய்து Remove என்பதை அலுத்துக.

அவ்வளவு தான்..!

இனி குறிப்பிட்ட ஸ்மார்ட் போனை பயன்படுத்தி எவ்விதத்திலும் உங்கள் ஜிமெயில் கணக்கை அணுக முடியாது.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top