உலகளாவிய ரீதியில் இன்று அனைவராலும் மிகவும் விரும்பி பயன்படுத்தக்கூடிய ஒரு இணைய உலாவியாக (Web Browser) கூகுளின் "கூகுள் குரோம்" இணைய உலாவி இருந்து வருகிறது.


கூகுள் ஸ்மார்ட் லோக்


இது கணினிகளில் மட்டுமல்லாது ஆண்ட்ராய்டு, ஐபோன் போன்ற ஸ்மார்ட் சாதனங்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் நீங்கள் கணினி மூலமோ அல்லது ஸ்மார்ட் சாதனங்கள் மூலமோ கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்தி இணையத்தை வலம் வரும் போது நீங்கள் பல் வேறு தளங்களில் உள்ளிடக் கூடிய உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கடவுச்சொல்லை சேமிக்க வேண்டுமா? என கூகுள் குரோம் இணைய உலாவி உங்களிடம் வினவுவதை அவதானித்து இருப்பீர்கள்.

ஸ்மார்ட் போன் கடவுச் சொல் சேமித்தல்


அவ்வாறு நீங்கள் சேமித்துக் கொண்டால் குறிப்பிட்ட இணைய உலாவியை பயன்படுத்தி அந்த தளத்துக்கு நீங்கள் மீண்டும் விஜயம் செய்யும் போது இணைய உலாவியில் சேமிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொற்கள் தானாகவே உள்ளிடப்படும். எனவே அவற்றை நீங்கள் உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.

இவ்வாறு நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு இணைய தளங்களுக்குமான மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொற்களை, உங்களுக்கான பிரத்தியோக கூகுள் கணக்கிலும் சேமித்து விடுகிறது கூகுள்.

எனவே உலகில் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் எமது கூகுள் கணக்கின் ஊடாக கூகுள் குரோம் இணைய உலாவியில் சேமித்த அனைத்து இணைய தளங்களுக்குமான மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொற்களை மீள பெற்றுக் கொள்ள முடியும்.தொடர்புடைய இடுகை:


இவ்வாறு எமது கூகுள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொற்களை பின்வரும் வழிமுறையில் பெற்றுக் கொள்ளலாம்.


முதலில் உங்கள் கணினியில் உள்ள அல்லது ஸ்மார்ட் போனில் உள்ள இணைய உலாவி ஒன்றை பயன்படுத்தி https://passwords.google.com எனும் இணையப் பக்கத்திற்கு செல்க.


கூகுள் கணக்கிற்கான முகப்பு


பின் கூகுள் கணக்கிற்கான உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொற்களை குறிப்பிட்ட பக்கத்தில் உள்ளிடுக.

கூகுள் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள்


இனி நீங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்தி சேமித்த அனைத்து இணைய தளங்களுக்குமான மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொற்கள் போன்றன பட்டியல் படுத்தப்படும்.

குரோம் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள்


பின்னர் கடவுச்சொற்களுக்கு அருகில் தரப்பட்டுள்ள சிறிய குறியீட்டை சுட்டுவதன் மூலம் சேமிக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல்லை அறிந்து கொள்ளலாம்.

அவ்வளவுதான்.தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top