சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு மொபைல் சாதனங்கள் மூலமான அழைப்புக்களும் குறுஞ்செய்திகளுமே (SMS) அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.எனினும் குறுகிய காலத்திலேயே அந்த நிலைமை மாற்றம் அடைந்து பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர், என மாற்றம் பெற்றுள்ளது.


அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட் சாதனங்களில் இந்த தொடர்பாடல் வசதிகள் அனைத்தும் உட்புகுத்தப்பட்டுள்ளதுடன் அவைகளை பயன்படுத்தும் வழிமுறைகளும் இலகு படுத்தப்பட்டுள்ளது.

இதனை மேலும் இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர், மற்றும் ஏனைய சேவைகளின் ஊடாக நினைத்த மாத்திரத்திலேயே இன்னும் ஒருவருடன் தொடர்பு கொள்ள வழிவகுக்கின்றது Drupe எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி.


Android Drupe Application


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சேமித்திருக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்களின் இலக்கங்களுக்கு உடனடியாக அழைப்புக்களை மேற்கொள்ளவும் குறுஞ்செய்திகளை அனுப்பவும், வாட்ஸ்அப், வைபர் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளவும் அல்லது அவற்றின் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் என பல்வேறு வசதிகளை இந்த செயலியின் ஊடாக பெற முடிகிறது.

Drupe android Smart phone


இந்த செயலியின் ஒரு பக்கத்தில் நீங்கள் சேமித்திருக்கும் தொடர்பு இலக்கங்களும் (Contacts) மறு புறத்தில் Call, SMS, Email,  பேஸ்புக் மெசெஞ்சர், வைபர், வாட்ஸ்அப் போன்ற ஏனைய வசதிகளும் தரப்பட்டுள்ளன.

இனி நீங்கள் உங்கள் நண்பர் ஒருவருக்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும் எனின் அவரது தொடர்பு இலக்கத்தை அழைப்புகளுக்கான குறியீடு வரை நகர்த்த வேண்டும், அதே போல் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் எனின் அவரது தொடர்பு இலக்கத்தை வாட்ஸ்அப் செயலியின் குறியீடு வரை நகர்த்த வேண்டும். இது போல் இந்த செயலி ஆதரவு அளிக்கக் கூடிய எந்த ஒரு சேவையின் மூலமும் இன்னுமொருவருடன் மிக இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகைகள்: மேலும் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கக் கூடிய Contacts என்பதற்கு புது வடிவம் கொடுக்கக்கூடிய இந்த செயலி அழகிய தோற்றத்தை கொண்டுள்ளதுடன் அதன் தோற்றத்தை எமது விருப்பம் போல் மாற்றி அமைப்பதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.


டுரூப் செயலி


அத்துடன் இதன் அமைப்புகளுக்கான (Settings) பகுதியின் மூலம் இந்த செயலியில் எவ்வாறான செயலிகள் தோன்ற வேண்டும் அதில் முதலாவதாக இரண்டாவதாக என அதன் வரிசை முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பவைகளை எமது விருப்பம் போல் அமைத்துக் கொள்ள முடியும்.


டுரூப் செயலி அமைப்புக்கள்


மேலும் இந்த செயலியை மிக விரைவாக திறந்து கொள்வதற்காக உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் திரையில் தோன்றக்கூடிய சிறிய குறியீட்டை தொடர்ச்சியாக அழுத்திய பின் நகர்த்துவதன் மூலம் அதனை திரையில் உங்களுக்கு விருப்பமான பகுதியில் தோன்றச் செய்யலாம். 

அத்துடன் Lock Screen இல் இருந்தவாறே உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. இந்த வசதியை குறிப்பிட்ட செயலியின் அமைப்புகளுக்கான பகுதி மூலம் செயற்படுத்திக் கொள்ள முடியும்.

தொடர்புடைய இடுகை:


இவைகள் தவிர இந்த செயலியின் அமைப்புக்களுக்கான பகுதியின் ஊடாக எமது வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப இந்த செயலியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.தொடர்புடைய இடுகை: 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top