உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் பிடித்த புகைப்படம் ஒன்றின் அல்லது உங்கள் Android சாதனத்தில் உள்ள புகைப்படம் ஒன்றின் பின்புல தோற்றம் (Background) அலங்கோலமாக உள்ளதா? அல்லது அதன் பின்புலத்தில் இருக்கும் காட்சிகளை நீக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?


Background Eraser செயலி

 

அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Background Eraser எனும் Android சாதனத்துகான செயலி 

இந்த செயலியில் தரப்பட்டுள்ள வசதிகள் மூலம் எந்த ஒரு புகைப்படத்தில் இருக்கக் கூடிய பின்புல காட்சிகளையும் மிக விரைவாகவும், துல்லியமாகவும் நீக்கிக் கொள்ள முடியும்.

  • இந்த செயலியில் தரப்பட்டுள்ள Load a photo என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் பின்புலத்தை நீக்க வேண்டிய புகைப்படத்தை உங்கள் Android சாதனத்தில் இருந்து தெரிவு செய்து கொள்ள முடியும்.

  • பின்னர் தோன்றும் Crop பகுதியின் ஊடாக புகைப்படத்தில் தோன்றச் செய்ய வேண்டிய பகுதியை மாத்திரம் விட்டுவிட்டு ஏனைய பகுதிகளை நீக்கிக் கொள்ளல் வேண்டும். (Crop)

Background Eraser aplication


பின் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Extract எனும் பகுதியில் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருந்து நீக்க வேண்டிய வலைசலான பகுதிகளை ஒரு சில நொடிப் பொழுதுகளிலேயே நீக்கிக் கொள்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.

  • குறிப்பிட்ட செயலியின் இடது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள Extract எனும் பகுதியில் நீல நிறத்தில் அமைந்த Add எனும் Button ஐ சுட்டுவதன் ஊடக பெறப்படும் Brush மூலமாக புகைப்படத்தில் தோன்ற வேண்டிய பகுதியில் கீறலை ஏற்படுத்த வேண்டும்.


Background Eraser Android


  • அதே போல் சிவப்பு நிறத்தில் அமைந்துள்ள Remove எனும் Button ஐ சுட்டுவதன் ஊடக பெறப்படும் Brush மூலமாக புகைப்படத்தில் இருந்து நீக்க வேண்டிய இடத்தில் கீறலை ஏற்படுத்த வேண்டும்.

இனி குறிப்பிட்ட புகைப்படத்தில் இருந்து தேவையற்ற பகுதிகள் உடனடியாக நீக்கப்பட்டு விடும்.


மேற்குறிப்பிட்ட செயற்பாட்டை மிக இலகுவாக மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பகுதியில் Zoom மற்றும் Undo மற்றும் Unselect போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன.


தொடர்புடைய இடுகை:


மேலே குறிப்பிட்டுள்ள இரு முறைகள் மூலமும் நீக்கிய பின்னும் அதில் உள்ள பின்புலப் படம் சரியாக நீக்கப்படாமல் அதில் குறைபாடுகள் இருப்பின் குறிப்பிட்ட செயலியின் கீழ் பகுதியில் இருக்கும் Auto, Manual, Repair போன்ற வசதிகளை பயன்படுத்தலாம்.

Photo Editor Android செயலி


1. Auto - இந்த Tool மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற பகுதிகளை சுட்டும் போது அவைகள் கொண்டுள்ள நிறத்தின் அடிப்படையில் தேவையற்ற பகுதிகள் தானாகவே நீக்கப்பட்டுவிடும்.

2. Manual - மேற்குறிப்பிட்ட Auto என்பதன் மூலம் சரியாக நீக்கிக் கொள்ள முடியாத பகுதிகளை நாம் சரியாக இனங்காண்பதன் எமது விருப்பத்திற்கு ஏற்ப நீக்கிக் கொள்ள முடியும்.

3. Repair - நீங்கள் Manual எனும் பகுதி மூலமாக தேவையற்ற பகுதிகளை நீக்கும் போது தோன்ற வேண்டிய பகுதிக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை Repair என்பதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.

இறுதியாக குறிப்பிட்ட செயலியின் மேற்பகுதியில் தரப்பட்டுள்ள Done என்பதை சுட்டும் போது பெறப்படும் அடுத்த சாளரத்தில் Save என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தை உங்கள் Android சாதனத்தில் சேமித்துக் கொள்ளலாம்.

Photo Editing Android செயலி


மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு சந்தர்பத்திலும் குறிப்பிட்ட Tool வகைகளை சிறிது, பெரிதாக மாற்றுவதற்கான வசதியும் குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ளது.

அது மாத்திரம் இன்றி இந்த செயலியில் தரப்பட்டுள்ள Undo, Redo, Zoom, Unselect போன்ற வசதிகள் மூலம் தேவையற்ற பகுதிகளை மிகவும் துல்லியமாக நீக்கிக் கொள்ள முடிகிறது.

இவ்வாறு தேவையற்ற பகுதிகளை நீக்கிய புகைப்படத்தை இன்னும் ஒரு செயலியின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பின்புல படத்துடன் இணைத்துக் கொள்ள முடியும். இது தொடர்பான பதிவை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

எமது பதிவுகளை தவறாமல் படிக்க எமது பேஸ்புக் பக்கத்தை Like செய்வதுடன் See First வசதியை செயற்படுத்திக் கொள்ளுங்கள்.


Background Eraser செயலியை தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பை சுட்டுக.




தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top